வீட்டிலிருக்கும்போது நான் ஏதாவது வேலைகள் இருந்தால் மகனைத் தொட்டிலில் படுக்கவைத்து விட்டுச் செய்வேன். அவர் எழுந்துவிட்டால் இமா தனக்குத் தெரிந்த பாடல்களைப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுவா. சில வேளைகளில் பாட்டைக் கேட்டுக் கொண்டு மகன் திரும்ப நித்திரையாகி விடுவதுமுண்டு.
ஐந்து வயதானதும் நான் கடமையாற்றிய பாடசாலையிலேயே இமாவைச் சேர்த்தோம். அது பெண்கள் பாடசாலை. ஆனாலும் முதலாம், இரண்டாம் வகுப்புகளில் ஆண் குழந்தைகளும் படித்தார்கள். அங்கும் எனக்கு முதல் வகுப்புத்தான் (ஆண்கள் பிரிவு) கிடைத்தது.
பாடசாலையில் நடைபெற இருந்த நிகழ்வொன்றில் எல்லா வகுப்பு மாணவர்களும் ஏதாவது பாடல், நடனம் அல்லது நாடகம் கொடுக்க வேண்டுமென அதிபர் உத்தரவிட்டார். இரண்டு வகுப்பு மாணவர்களையும் சேர்த்து சக ஆசிரியரும் நானும் வண்ணத்துப்பூச்சிகள் பற்றிய பாடல் பழக்கினோம். உடைகள் சிறகுகள் எல்லாம் அழகாகத் தயாரித்தோம்.
குறிப்பிட்ட தினத்தன்று ஒத்திகை பார்க்க மேடைக்கு அழைத்துச் சென்ற போது இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. என்னசெய்வதென நாங்கள் யோசித்துக் கொண்டிருக்க அங்கு வந்த அதிபர் "இமா, இது உங்கள் அப்பா செய்த மேடைதான். உடையவே உடையாது," என்று சொல்லிச் சமாளித்தார். பின்னர் யாவும் ஒழுங்காக நடந்தன.

பின்னேரம் அப்பா வீடு வந்ததும்
//பின்னேரம் அப்பா வீடு வந்ததும், "நீங்கள் செய்த மேடையில் ஏறி நான் பாட்டுப் பாடினேன் அப்பா," என்றா.// ரொம்ப சூப்பர் அம்மா.
பதிலளிநீக்கு//இமா "மேடையில் நான் ஏற மாட்டேன், உடைந்து விடும்," என்று அழ ஆரம்பித்தா. //
பதிலளிநீக்குஆஹா...முன்னெச்சரிக்கை தான் ..அப்பவே புத்திசாலிதான் ..!!
படிக்க படிக்க சுவாரஸ்யம்...
பதிலளிநீக்குஇமா சரியான குறும்பி என்று நினைத்தேன்...இவ்வளவு சென்சிடிவா.... ரொம்ப அழகு அந்த போட்டோ.........
பதிலளிநீக்குஅப்பா செய்த மேடை அழகான கதை. அதுசரி ஜெபா ஆன்ரி, இமாவுக்கு ஏன் இந்தாப்பெரிய சட்டை போட்டனீங்கள்?
பதிலளிநீக்குஅன்புள்ள ஹைஷ்,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்
எனது நன்றி.
அன்புள்ள ஜெய்லானி,
பதிலளிநீக்குஎல்லாப்பதிவுகளுக்கும் கருத்துப்பதிவு செய்யும் உங்களுக்கு எனது நன்றி.
sangkavi,
பதிலளிநீக்குஉங்களுக்கும் என் அன்பான நன்றிகள்.
இலா,
பதிலளிநீக்குஉங்கள் வருகைக்கும் பதிவுக்கும் என் நன்றி.
அதிரா,
பதிலளிநீக்குநீங்கள் பார்க்க வேண்டும் என்றுதான் அந்த சட்டையைப் போட்டு விட்டேன். உங்களுக்கு எனது நன்றி.
ஹாய் ஹைஷ். ;)
பதிலளிநீக்கு~~~~~~
ஜெய்லானி சொன்னால் //முன்னெச்சரிக்கை// சரியாகத்தான் இருக்கும். ;) பாராட்டுக்கு நன்றி.
~~~~~~
//படிக்க படிக்க சுவாரஸ்யம்... // ஹ்ம். ;)
~~~~~~
போட்டோவை மட்டும்தான் சொல்றீங்களோ இலா!!! ;(
;)
//இமாவுக்கு ஏன் இந்தாப்பெரிய சட்டை போட்டனீங்கள்? //
பதிலளிநீக்கு//அதிரா,
நீங்கள் பார்க்க வேண்டும் என்றுதான் அந்த சட்டையைப் போட்டு விட்டேன். //
;D x 64646464
யாராவது கெதியா ஒரு பெட்டி டிஷூ கொண்டுவந்து தாங்கோ எனக்கு. ;)))
இதோ ப்ரீ டெலிவரி :))))
பதிலளிநீக்கு;D நன்றி ஹைஷ். ;)
பதிலளிநீக்குசெபா ஆன்டி, நல்லா இருக்கு. இமாக்கும் வண்ணத்துப் பூச்சிக்கும் இடையில் தோன்றிய நட்பு இன்னும் தொடருது.
பதிலளிநீக்குவானதி,
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி. இமாவுக்கு வண்ணத்துப் பூச்சி மட்டுமல்ல ஆமை, முயல் போன்றவைகளையும் சிறு வயது முதலே பிடிக்கும். குழந்தையாக இருக்கையில் கையில் குஞ்சு ஆமைகளை வைத்து விளையாடுவா.
நானும் இப்பதான் இதைப் பற்றி யோசிச்சன் வாணி. ;)பூர்வ ஜென்ம பந்தம்.
பதிலளிநீக்குபாம்புகளை பிடித்து போத்தலில் அடைப்பவருக்கு ஆமை எல்லாம் சும்மா .... ம்ம்ம் .. என்ன சொல்வது? வார்த்தைகள் வரமாட்டேன் என்கிறது.
பதிலளிநீக்கு;)
பதிலளிநீக்குவாணி குழுவினர்க்கோர் நற்செய்தி.
இதைப் பாருங்கோ.
http://imaasworld.blogspot.com/2010/07/blog-post_9925.html
வாணி குழுவினர்???? வேறு யாருப்பா என் குழுவில் இருப்பது ( என்னைத் தவிர யாரும் இருப்பதாக தெரியவில்லை )?? இமாவின் இந்த லிங்க் போய் பாருங்கள்.
பதிலளிநீக்குசெபா... நாங்களெல்லாம் சிறு பயல்கள் செய்த குறும்பு கதைகளை எழுதிக் கொண்டிருக்க, நீங்களோ நிஜக் குறும்புக்காரர் ஒருவரை களமிறக்கி இருக்கீங்க :))
பதிலளிநீக்குஇமா கொஞ்சம் அழுக்குப் புள்ளையாகத் தெரியறாரே? :)
அதீஸ்.. எப்பிடிஎப்பிடி எல்லாம் யோசித்து கேள்வி கேக்கரீங்கோ? :)))))))))
ஆஹா..இமாவா இது? சூப்பர் போங்க!!
பதிலளிநீக்குசிரிக்கவைக்கும் நினைவுகள்..அதுவும் அதே புகைப்படங்களுடன். இனிக்கும் நினைவுகள்!
பகிர்ந்ததுக்கு நன்றிங்க செபாமேடம்!
அதை வாசிச்சு எனக்குக் கண்ணில தண்ணி வந்திட்டுது வாணி. மிக்க நன்றி. ;)
பதிலளிநீக்குLs! dirt is good you know. ;)))
//இமாவா இது? சூப்பர் போங்க!! // ம். உங்களுக்கு இருக்கு மஹீ. பொறுங்க. ;)
சந்தனா,
பதிலளிநீக்குநான் நிறையக் குறும்புக்காரர்களை சந்தித்திருக்கிறேன். எனது குழந்தைகள், பேரக்குழந்தைகள், மாணவர்கள், அயலாரின் குழந்தைகள் என ஏராளமானவர்கள். மறக்க முடியாத ஆனால் மகிழ்ச்சியூட்டும் நினைவுகள். நினைவுகளைத் தூண்டியமைக்கு நன்றி
வானதி,
பதிலளிநீக்குஎனது இன்றைய வாழ்க்கைக்கு உற்சாகமளிப்பது இத்தகைய பழைய நினைவுகளை அசை போடுவதுதான். அத்தோடு இங்கு வரும் உங்கள் அனைவரது கருத்துரைகளும் தான்.
நன்றி.
மஹி,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.