வியாழன், 23 செப்டம்பர், 2010

உரையாடல்

வழக்கம் போல் சிறிது நேரம் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று அனிக்கா வீட்டுக்குப் போனேன்.



கண்டதும் வரவேற்புப் பலமாக இருந்தது. இருவரும் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். கதை தொடங்கியது.



"கிராண்ட்மா, உங்கள் உடை அழகாயிருக்கிறது. காதணிகளும் அழகாயிருக்கின்றன." என்றார் அனிக்கா

"அப்படியா? நன்றி."



"ஆனால் நீங்கள் அழகாயில்லை." ("அப்படிச் சொல்லாதே,"

இடையே தாயின் குரல்)



"குழந்தை தானே. அவளது அபிப்பிராயத்தை சொல்கிறாள். விட்டுவிடுங்கள்." என்றேன் நான்.





"உங்கள் காதணிகளை எனக்குத் தருகிறீர்களா?"

"ஏன்?"

"நான் கலியாணம் செய்யப் போகிறேன்."

"யாரை?"

"அனன்யாவை."

"அவள் உன் தங்கையல்லவா?"

"பரவாயில்லை." என்றாள் அனிக்கா.



பேச்சை எப்படி மாற்றலாம் என்று யோசிக்கையில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடல் கவனத்தை ஈர்த்தது.



உடன் அடுத்த வினா.



"கிரான்மா, இந்தப் பிள்ளைகள் என்ன பாடுகிறார்கள் சொல்லுங்கள்," என்றாள்.

"ஹிந்திப் பாடலின் பொருள் எனக்கு எப்படித் தெரியும்?" என்றேன்.

தலையில் கைகளால் தட்டி "Use your brain," என்றாள் அனிக்கா.



இந்தக்காலத்துக் குழந்தைகள் சுட்டிகள் தான்

17 கருத்துகள்:

  1. செபா ஆன்டி, நல்லா இருக்கு. தோட்டை குடுத்து விட்டீங்களா??

    பதிலளிநீக்கு
  2. இந்தக்காலத்துக் குழந்தைகள் சுட்டிகள் தான்--ஆமம் என்னை போலவே ....எப்புடி.

    கிரன்ட்மா எப்புடி.எப்படி எல்லாம் அழகா எழுதுறீங்க..யாரு கிட்ட கத்துகிடீங்க..

    திரும்பவும் வருவேன்..அடுத்தவாட்டி நேரிய எழுதி இருக்கணும், ..எல்லா வேணாம் கம்மிய இதுபோல எழுதுங்க போதும்..

    பதிலளிநீக்கு
  3. யார் செபாம்மா இந்த மழலை!!! ;)

    சிவா யாருங்க நீங்க? புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தையா!! ;)

    பதிலளிநீக்கு
  4. "Psalm for the Day" அழகாக இருக்கிறது மம்மி.

    //The LORD is my shepherd, I shall not be in want. He makes me lie down in green pastures, he leads me beside still waters, he restores my soul.//

    beautiful.

    பதிலளிநீக்கு
  5. "Psalm for the Day" அழகாக இருக்கிறது மம்மி.
    yes மம்மி......:)))))

    பதிலளிநீக்கு
  6. சிவா யாருங்க நீங்க? புலம் பெயர்ந்த தமிழ்க் குழந்தையா!! ;)
    mmmm :)

    yes நீங்க யாருங்க????

    பதிலளிநீக்கு
  7. வானதி,
    சிவா,
    இமா,
    எல்லோருக்கும் என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  8. சிவா,
    நிறைய எழுதுவதா? குறைவாகக் கூட எழுத முடியவில்லை.
    முடியும் போது எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  9. செபா ஆண்டி நலமா?
    எப்படி இருக்கீங்க.

    (குழந்தைகள் குறும்பு எப்போதுமே ரசனை தான்)

    பதிலளிநீக்கு
  10. ஜலீலா,
    வருகைக்கு நன்றி.
    நான் நலம். இந்தக் குழந்தைகளின் குறும்புத்தனங்கள் இன்னும் எவ்வளவோ. மெதுவாக ஒவ்வொன்றாக எழுதுவேன்.

    பதிலளிநீக்கு
  11. செபா ஆன்டி! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா உங்க வீட்டுக்கு வரலை.. மன்னிக்கணும்... ரொம்ப நாளா என் வீட்டுக்கே எனக்கு வழி தெரியாது. பக்கத்தில இருந்த "நட்பு" வீடு வழியா மறக்காம எல்லார் வீட்டுக்கும் போவேன்.. அது தான்...

    குழந்தைகள் ரொம்பவே சுட்டி!

    பதிலளிநீக்கு
  12. இலா,
    / ரொம்ப நாளா உங்க வீட்டுக்கு வரலை.. மன்னிக்கணும்.../
    மன்னிப்பு எதற்கு? இப்போ வந்துவிட்டீர்களே.
    நான் நலம்.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  13. //தலையில் கைகளால் தட்டி "Use your brain," என்றாள்//

    ஹா..ஹா.. இதுக்கு பதிலே சொல்ல முடியாதே..!!

    பதிலளிநீக்கு
  14. //பக்கத்தில இருந்த "நட்பு" வீடு வழியா மறக்காம எல்லார் வீட்டுக்கும் போவேன்.. அது தான்...//

    சரிதான் .. ஒரு வீடு பூட்டி கிடக்கு , ஒரு வீட்டில ஆளை கானோம் :-(

    பதிலளிநீக்கு