ஐந்தாவது பிறந்த நாள் முடிந்து அனிக்கா பாடசாலை போவதற்கு ஆயத்தமாகிவிட்டாள்.
ஏற்கனவே மூன்று வாரங்களில் ஒவ்வொரு நாள் 'school visit' என்று ஒரு மணித்தியாலம் பயிற்சி கொடுக்கப்பட்டது.
முதல் இரண்டு வாரங்கள் இரண்டு மணிக்குப் பாடசாலை முடிவதால்
அந்த இரண்டு வாரமும் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் அனிக்காவை அழைத்து வரும்படி கேட்டுக்கொண்டார். ஆசிரியருக்கு எங்களை அறிமுகப்படுத்துவதற்காக முதல் நாள் போகையில் எங்களையும் அழைத்துப் போவதாகச் சொன்னார்.
முதல் நாள் காலை எட்டரை மணிக்கு நாங்கள் தயாராக இருந்தோம். குழந்தைகள் வந்து அழைத்தார்கள். காரில் ஏறியதும் பக்திப்பாடல் ஹிந்தியில் ஒலிபரப்பவும் இருவரும் இணைந்து அழகாகப் பாடினார்கள்.
மூன்றே நிமிடத்தில் பாடசாலை வந்தது. உள்ளே போனதும் ஆசிரியையிடம், "இவர்கள் எனது க்ராண்ட்மாவும் க்ராண்ட்பாவும். இவர்கள்தான் இன்று என்னை அழைத்துப் போவார்கள்," என்று அனிக்கா சந்தோஷை முந்திக்கொண்டு எங்களை அறிமுகப்படுத்தினார். புத்தகப்பையிலிருந்து தேவையானவற்றை எடுத்தபின் புத்தகப்பையை கொழுவுவதற்கு வகுப்பிற்கு வெளியே பெயர்களோடு இடம் ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. கொழுவ வேண்டிய இடத்தில்
கொழுவி விட்டு அனிக்காவை உள்ளே அழைத்து சென்றார் ஆசிரியை.
நாங்கள் வீட்டுக்கு வந்தோம்.
பிற்பகல் இரண்டு மணிக்கு முன்னதாக பாடசாலைக்குப் போனோம். பிள்ளைகள் எல்லோரும் வெளியே அமர்ந்திருந்தார்கள். அனிக்கா ஆசிரியையிடம் நாங்கள் வந்துவிட்டதை அறிவிக்க அவர் வெளியே வந்து புத்தகப்பையில் எல்லாவற்றையும் வைக்கச் செய்து எங்களுடன் அனுப்பி வைத்தார்.
அனிக்காவும் சந்தோஷும் எங்களுடன் பழகிய விதம் அவருக்கு நாங்கள் அவளது குடும்ப உறவினர் என்ற எண்ணத்தைக் கொடுத்திருக்க வேண்டும் என்பதை அவரது "You are lucky to have your grandparents here," என்ற வார்த்தைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது.
அனிக்கா மிகுந்த மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்தாள். கதவைத் திறந்ததும் புத்தகப்பையை அதன் இடத்தில் கொழுவிவிட்டு; சப்பாத்தைக் கழற்றி அதனிடத்தில் வைத்து விட்டு அறைக்குள் மறைந்து விட்டாள். சிறிது நேரத்தில் உடை மாற்றி வெளியே வந்து, "கிராண்ட்மா எனக்கு இந்த உடைகளைக் கொழுவ உதவி செய்யுங்கள்," என்று கேட்டு அதையும் கொழுவிவிட்டு புத்தகப்பையைத் திறந்து செய்த வேலைகள் எல்லாவற்றையும் காட்டினாள். பின் சாப்பாட்டுப் பெட்டியை எடுத்து சுத்தமாகக் கழுவித் துடைத்து வைத்தாள். மேசையில் இருந்த பிஸ்கட் இரண்டை எடுத்துச் சாப்பிட்டபின் தனது படுக்கையில் படுத்துக்கொண்டாள்.
அனிக்கா வேலைகளை ஒன்றன் பின் ஒன்றாகச் செய்த விதம் எங்களை வியப்படையச் செய்தது.
குட்டீஸ் என்றாலே அப்படித்தான் செபா ஆன்ரி, புதுசுக்கு வண்ணான் வெள்ளை கட்டி வெளுத்தாராம்... அப்பூடித்தான் அனைத்தும். எங்கட வீட்டிலயும்... முதல் மாதம்... என்னாலேயே நம்ப முடியவில்லை, ஸ்கூலால வந்ததும், என்னா ஒழுங்கு.. யூனிபோம் எல்லாம் மாத்திப்போட்டு, கூப்பிடக் கூப்பிட சாப்பிட வராமல் தலைகீழாக ஹோம் வேர்க்கையும் முடிச்சுப் போட்டுத்தான் மிச்ச வேலை நடந்துது:))..
பதிலளிநீக்குஇப்போ... ஹோம் வேர்க்கை முடிக்கச் சொல்லி... எனக்கு களை வந்துவிடும்...:).
உங்களைப் போல் உதவியாக இருக்க, வெளிநாட்டில் கிடைக்காது, அவர்களுக்கும் உதவியாகுது, உங்களுக்கும் பொழுது போக்காகுது.
ஒரு குறிப்பிட்ட வயசுக்கு பிறகு நாமும் குழந்தையும் ஒரே மாதிரிதான் . இது நிறைய பேருக்கு தெரிவதில்லை :-))
பதிலளிநீக்கு//புதுசுக்கு வண்ணான் வெள்ளை கட்டி வெளுத்தாராம்... அப்பூடித்தான் அனைத்தும்.//
பதிலளிநீக்குஹா..ஹா... :-))
//ஒரு குறிப்பிட்ட வயசுக்கு பிறகு நாமும் குழந்தையும் ஒரே மாதிரிதான் .//
பதிலளிநீக்குஜெய்க்கு வந்திட்டுதோ அந்தக் குறிப்பிட்ட வயசூஊஊஊஊஊ?:)))... ஆ.. மீ.. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ....இல்ல:))
ம்.. இதுதான் அங்க வந்து ரெண்டுபேரும் 'அனிக்கா.. அனிக்கா' என்றனீங்களோ! ம்.
பதிலளிநீக்குஅதிரா,
பதிலளிநீக்குஉண்மைதான் அதிரா இருப்பினும் அது குழந்தைகளின் குணம்தானே. சில பெரியவர்களே அப்படி இருக்கும் போது சின்னவர்களைக் குறை சொல்ல முடியாது.
நன்றிகள்.
ஜெய்லானி,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
வயதாகும் போது பெரியவர்களும் குழந்தைகள் போலாவது இயற்கையே. நன்றி.
தாங்கள் என் வலைப்பூவுக்கு வருகை தந்து நான் எழுதிய ”பல்லெல்லாம் பஞ்சாமியின் பல்லாகுமா” என்ற நகைச்சுவைக் கதையை மிகவும் ரசித்ததாகவும், மேற்கொண்டு என்னுடைய எல்லாக் கதைகளையுமே படிக்க அது ஆவலை ஏற்படுத்தி விட்டதாகவும் எழுதியிருந்தீர்கள். மிக்க மகிழ்ச்சி.
பதிலளிநீக்குமிகவும் நன்றி.
என்னுடைய பெரும்பாலான கதைகளிலுமே நகைச்சுவை கலந்தே இருக்கும். பொறுமையாக ஒவ்வொன்றாகப்படித்து விட்டு, மறக்காமல் பின்னூட்டம் அளியுங்கள். அது எனக்கு உற்சாகம் தருவதாக இருக்கும்.
இந்தத்தங்களின் பதிவைப் படித்து ரசித்தேன்.
துபாயிலிருக்கும் என் பேரன் பேத்தியுடன் 2004 இல் ஒரு 45 நாட்கள் நான் தங்கியிருந்தேன். அந்த ஞாபகம் எனக்கு உடனே வந்து போனது. மீண்டும் துபாய் வரவேண்டும், எங்கள் பள்ளியின் Grand parents day யில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று குழந்தைகள் இப்போதும் அன்புக்கட்டளை இட்டுள்ளன. மீண்டும் வரும் டிஸம்பரில் போனாலும் போவேன்.
//அவரது "You are lucky to have your grandparents here," என்ற வார்த்தைகளில் இருந்து அறியக் கூடியதாக இருந்தது. //
இந்த சந்தோஷமெல்லாம் நமக்கும், குழந்தைகளுக்கும் கிடைக்க இருவருக்குமே ஒரு கொடுப்பிணை வேண்டும்.
நல்லதொரு பதிவு படித்த திருப்தி உள்ளது.
உங்கள் பேரப்பிள்ளைகளுக்கு என் அன்பான ஆசிகளைச் சொல்லவும்.
[
நீங்கள் ஆங்காங்கே உபயோகப்படுத்தியிருக்கும் ”கொழுவ” என்ற வார்த்தையை நான் இதுவரை கேள்விப்பட்டதே இல்லாததால் ஆச்சர்யப்பட்டேன்.]
அன்புடன் vgk
ஐயா,
பதிலளிநீக்குதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க மகிழ்ச்சியுடன் என் நன்றியைத் தெரிவிக்கிறேன். வாசிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும். தொடர்ந்து வாசிப்பது கடினமாக இருப்பதால் ஆறுதலாக வாசித்துப் பதிவு எழுதுவேன்.
எனக்கு 22, 25 வயதில் இரு பேரன்களும் 20 வயதில் ஒரு பேர்த்தியும் இருக்கிறார்கள்.(இவர்கள் தான் என் பிள்ளைகள்
வழி பேரர்கள்.) இந்தக் குழந்தைகள் பக்கத்து யூனிட்டில் பிறந்து அந்த நாள் முதலே எங்களுடன் வளரும் இந்தியக் குழந்தைகள். ஹிந்தி பேசுவார்கள். தமிழிலும் சில சொற்கள்
சொல்வார்கள். இவர்களும், இவர்களது பெற்றோரும் எங்களுடன் மிக அன்யோன்யமாகப் பழகுவார்கள்.
ஒரே நாட்டில் வாழ்ந்தாலும் கூட்டுக் குடும்பமாகவோ பக்கத்திலோ பெற்றோர் பிள்ளைகள் சேர்ந்து வாழ முடியாத நிலையில் இவர்கள் எங்கள் மீது காட்டும் அன்பும் ஆதரவும்
எங்களுக்கு இறைவனளித்த கொடையே.
'கொழுவுதல்' என்றால் மாட்டுதல் என்று பொருள்.
நன்றி ஐயா,
அன்புடன் செபா
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்தி உள்ளேன்.பாரவை இட்டு தங்கள் மேலான கருத்தினை பகிர்ந்து கொள்ளுங்கள்.
பதிலளிநீக்குCongratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குஸாதிகா, இராஜராஜேஸ்வரி இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். செபா இவற்றைப் பார்த்ததாகத் தெரியவில்லை. இப்போ உறக்கத்திலிருப்பார்கள். நாளை தெரிவித்துவிடுகிறேன்.
பதிலளிநீக்குCongratulations for getting another award -Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..
பதிலளிநீக்குMumma... It's been an year since ur last posting. grrrr... Start again please.
பதிலளிநீக்குHappy birthday Mumma. ;)
பதிலளிநீக்குhttp://imaasworld.blogspot.co.nz/2014/06/blog-post_5001.html
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..!!!!!. வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்..!! :-)
பதிலளிநீக்கு