சனி, 23 ஜனவரி, 2010

எங்கள் அப்பார்ட்மென்ட் -2

நேற்று walk போய் வரும் போது ஒரு கார் எங்களருகில் வந்து நின்றது. "ஹாய் இது என் தாயார். கொரியாவிலிருந்து வந்துள்ளார்," என்று அறிமுகம் செய்து வைத்தார். "நாங்கள் சில நாட்களில் நாட்டுக்குத் திரும்புகிறோம்," என்றார். இந்தச் சந்தர்ப்பத்தில் இவரது உறவினர் ஒருவர் பற்றியும் குறிப்பிடவேண்டும். சென்ற வருடம் இங்கிருந்து போன பின்னரும் அடிக்கடி எங்களோடு தொலை பேசியில் பேசுவார். ஆங்கிலம் நன்றாகப் பேச முடியாவினும் எப்படியாவது தான் நினைப்பவற்றை விளங்கப்படுத்தி விடுவார்.


இவர்களைப் போல் இன்னும் பலர் நினைவில் உள்ளனர் . அவர்களைப் பற்றிப் பின்னர் எழுதுவேன்.

1 கருத்து:

  1. செபா அம்மா உங்கலுடைய பழைய நினைவுகள் படிக்கும் போது, எங்கலுக்கும் கூட இருந்து பார்த்தது போல் இருக்கு.

    நல்லா எழுதரிங்க வாழ்த்துக்கள் அம்மா.

    பதிலளிநீக்கு