ஞாயிறு, 23 மே, 2010

இமா குழந்தையாக


இமா குழந்தையாக இருந்த போது சமையல் செய்தாலும் உடைகள் தோய்க்கும் போதும் pram இல் இருக்க வைத்து ஏதாவது குழந்தைகளுக்கான பாடல்கள், கதைகள் சொல்லிக் கொடுப்பேன். அவவும் முடிந்தவரை திருப்பிச் சொல்லுவா. ஒன்றரை வயதிலேயே கதைக்க ஆரம்பித்து விட்டா. பாடசாலை போகையில் பக்கத்து வீட்டு ஆச்சியிடம் விட்டுப் போவேன்.

அடுத்த குழந்தையும் கிடைக்க இருந்ததால் இடம் போதாமையால் வேறு வீடு மாற வேண்டி ஏற்பட்டது. அங்கும் ஒரு வயதான தம்பதியர் பெருமளவு உதவியாக இருந்தனர். இமாவுக்கு இரண்டு வயது நிறைவுற்றுச் சில நாட்களில் மகன் பிறந்தார்.

ஒரு மாத காலம் நான் வீட்டில் நின்றேன். பிரசவ விடுப்பு முடிந்து பாடசாலை திரும்புவதற்கு முன்னர் குழந்தையைப் பராமரிக்க ஒரு பெண்ணை ஒழுங்கு செய்தோம். காலை ஆறரை மணி முதல் மாலை ஆறு மணி வரை தன்னால் இயன்ற அனைத்து உதவிகளையும் செய்வார். வயதான பறங்கிப் பெண் என்பதால் 'மம்மா ' என்று அழைப்போம். பிள்ளைகள் இருவரையும் மிக அன்பாகப் பராமரித்ததால் எங்களுக்கு அவரை மிகவும் பிடித்துப் போய் விட்டது.

சில மாதங்கள் கடந்த பின் ஒரு நாள் பாடசாலையிலிருந்து வந்ததும் மம்மா தேனீரைத் தந்த பின் "உங்களிடம் ஒரு விடயம் பேச வேண்டும் தம்பியும் (அப்படித்தான் என் கணவரை அழைப்பார்,) வரட்டும்" என்றார்.

இவர் வந்ததும் "தம்பி, தங்கச்சி, நான் வேறு வேலைக்குப் போகப் போகிறேன். இமா எனக்கு நல்ல ஐடியா ஒன்று சொல்லி இருக்கிறா.' என்றா. பின்னர் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலைச் சொன்னா.

"மம்மா உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?"

"கிழமைக்கு இருபது ரூபா "

"அவ்வளவு தானா? இது உங்களுக்குப் போதுமா?"

"போதாதுதான், என்ன செய்கிறது?"

"நீங்கள் ஏன் இங்கே வேலை செய்ய வேண்டும்? வேறு வேலைக்குப் போகலாமே?"

"எங்கே போவது? எனக்கு யார் வேலை தருவார்கள்?"

"நீங்கள் port cargo வில் (துறைமுக அதிகாரசபையில்) வேலைக்குப் போனால் நிறையச் சம்பளம் தருவார்கள்."

"ஓ! அப்படியா, எவ்வளவு கிடைக்கும்?"

"ஒரு நாளுக்கு நூறு ரூபா கிடைக்கும்."

"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

"நான் பார்ப்பேன்."

இப்படியே நீண்ட உரையாடல் நடக்குமாம். பின்னரும் பல முறை மம்மா சொல்லி சிரிப்பா.

23 கருத்துகள்:

 1. செபா ஆன்டி, அருமையாக இருக்கு. இன்னும் இமாவை பற்றி சொல்லுங்கோ. இமா உறுமினாலும் பரவாயில்லை.

  பதிலளிநீக்கு
 2. அம்மா,
  இமா ரொம்ப சமர்த்து, இல்ல?
  அந்த சின்ன வயசிலேயே அடுத்தவர்களைப் பற்றி சிந்திக்கும் உள்ளம் இருந்திருக்கே!!

  பதிலளிநீக்கு
 3. //"அது சரி, தம்பியை யார் பார்ப்பது?"

  "நான் பார்ப்பேன்."//

  விளையும் பயிர் முளையிலே தெரியும் . உண்மைதானே !!. போட்டோவில ஜெயா ன்னு போட்டிருக்கீங்க!! பறங்கிப் பெண் -அப்படின்னா ?

  பதிலளிநீக்கு
 4. சூப்பர்.. சின்னதிலே இமா ஒரு ஸ்ஸ்ஸ்ஸ்ஷ்ஷ்டையில் மிஸ்ஸியாக்கும்... சமத்து தான் இமா போங்க.... செபா ஆன்டி! இமா பத்தி இன்னும் எழுதுங்க..

  பதிலளிநீக்கு
 5. வாணீ.. கர்.. டொமார்ட்ட மாட்டி விடுவன், கவனம்.

  என்ன மாதிரி யோசிக்கிறீங்க செல்வி ;)

  ஜெய்லானி, அவங்க நான் சின்னதில யாரையும் கலாய்ப்பேன் என்று சொல்லவில்லை. ;)

  இலா, இப்பவும் நான் அப்படித்தான்.
  //இன்னும் எழுதுங்க.// என்னே ஆர்வம்! ;)

  பதிலளிநீக்கு
 6. ஜெய்லானி,
  //பறங்கிப் பெண் -அப்படின்னா ?//
  ஆங்கிலோ இன்டியன் என்பார்களே அதே தான்.
  செபா ஆன்டி, பதில் சொன்னதற்கு மன்னித்து விடுங்கள்.

  பதிலளிநீக்கு
 7. வானதி,
  வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
  தொடர்ந்து எழுத முயற்சிப்பேன்.

  பதிலளிநீக்கு
 8. செல்வி,
  அடிக்கடி வந்து என்னை உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஜெய்லானி,
  வருகைக்கு நன்றி. பறங்கியர் [burger] என்றால் இலங்கைக்கு வந்த போர்த்துக்கேயர், ஒல்லாந்தர்களின் வம்சாவளியினர். மட்டக்களப்பு, திருக்கோணமலை, கொழும்பு ஆகிய இடங்களில் வசிக்கிறார்கள். அவர்கள் பேசும் மொழி பறங்கிமொழி என்பார்கள்.

  பதிலளிநீக்கு
 10. இலா,
  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 11. செபா ஆன்ரி... இத்தலைப்பு ஏன் மேலே வரவில்லை? நான் தற்செயலாகவே பார்த்தேன்.

  இமா அப்பவே, இப்படி ஏதாவது சொல்லி மயக்கிடுவா போல இருக்கே எல்லோரையும்:).... தொடர்ந்து எழுதுங்கோ ஜெபா ஆன்ரி.

  இமா... குறுக்க குறுக்க பேசிக், குழப்பிடக்கூடாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

  பதிலளிநீக்கு
 12. அதிரா,
  வருகைக்கு எனது நன்றி.

  பதிலளிநீக்கு
 13. செபா ஆண்ட்டி தகவலுக்கு நன்றி..> எனது சொந்த ஊர் இதில இருக்கு. நேரம் கிடைத்தால் படித்து பாருங்க. இதில் உள்ள ஒரு மேட்டர் உங்கள் செய்தியும் ஒத்துப்போகிறது . அதனால்தான் கேட்டேன்.
  http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88

  மீண்டும் நன்றி..

  பதிலளிநீக்கு
 14. @@@vanathy--//ஜெய்லானி,
  //பறங்கிப் பெண் -அப்படின்னா ?//
  ஆங்கிலோ இன்டியன் என்பார்களே அதே தான்.//

  எனக்கும் தெரியும் இருந்தும் ஒரு சந்தேகம் அதுதான் .நீங்களும் பார்க்கலாம்.நன்றி...

  பதிலளிநீக்கு
 15. தகவலுக்கு நன்றி ஜெய்லானி. ;) சுவாரசியமாக இருந்தது. நீங்கள் நினைத்தது சரிதான். எங்கள் 'மம்மா' போர்த்துக்கேயர்கள் வழி வந்தவர். ஓர் சிங்களவரை மணந்திருந்தார். தமிழும் போர்த்துக்கீசிய பொழியும் பேசுவார்.

  //சிங்களமொழியில் இதற்கு ‘பரங்கிப்பட்ட’ என்றுதான் பெயராமே?!// இது தெரியவில்லை. ஆனால் 'கொழும்பு பகோடா' பற்றித் தேடிப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. ;)

  பதிலளிநீக்கு
 16. இது யாருடைய புளொக? இமாம்மான்ட அம்மாவே? அப்ப எங்களுக்கு இவா அம்மம்மா. ஹல்லோ அம்மம்மா, இமாம்மா இப்ப சரியான குழப்படி. (ஏன் இந்த வில்லத்தனம் என்டு இன்னும் விளங்கேல்ல இமாம்மா)

  பதிலளிநீக்கு
 17. படித்து கருத்திட்டதுக்கு நன்றி..புது தகவலும் சொலிருக்கீங்க. ஆனா எங்கூரில அந்த மொழி பேசுற ஆள் யாரும் இப்ப இல்ல .பிரஞ்ச் இருக்கு , ஃப்ரான்ஸிலும் இருக்காங்க..

  பதிலளிநீக்கு
 18. அன்புள்ள ஜெய்லானி,
  'பரங்கிப்பேட்டை' பற்றி வாசித்தேன். தெரியாத பல விடயங்கள்
  அறிய முடிந்தது. மிக நன்றி. அவர்கள் பேசும் மொழியில் நினைவில்
  உள்ள சில சொற்கள் இவை-
  'வீ ' வா என்பது பொருள். 'அக்கி வீ ' ஓடிவா இதையே தமிழ் கலந்து
  ஓடி வீ என்றும் சொல்வர். எங்கே போகிறாய்? ஓந்தி தந்தா?

  'சும்மா இரு' என்பதற்கு சும்மா சந்தா என்றும் கலந்து பேசுவார்கள். தாய் தந்தையை மம்மா பாப்பா என்றும் அண்ணாவை boovaa என்றும் அக்காவை சிச்சா என்றும் அழைப்பார்கள். வேறு ஊர் வந்து நீண்ட காலமாகிவிட்டதால் அநேக சொற்கள் மறந்து போய் விட்டன.

  மீண்டும் நன்றி ஜெய்லானி

  பதிலளிநீக்கு
 19. அனாமிகா,
  வருகைக்கு நன்றி. நான் இமாவின் அம்மாவே தான். இன்னும் சந்தேகமா?

  பதிலளிநீக்கு