புதன், 23 ஜூன், 2010

ஒரு வித்தியாசமான அனுபவம்

சில தினங்களுக்கு முன்னர் ஒரு நாள் மாலை குட்டிப்பெண்கள் வீட்டுக்குப் போய் சிறிது நேரம் பொழுது போக்கிவிட்டு வீடு திரும்பினேன். எங்கள் கதவருகில் நின்றிருந்த ஒன்பதாம் யூனிட் நண்பர் திரும்பிப் போய்க்கொண்டிருந்தார். உள்ளே நுழைந்த எனக்குப்
பெரிய அதிர்ச்சி. எங்கள் சமையலறை மேசையில் முழு ஆடு (உரித்ததுதான்) கிடத்தப்பட்டு மேசை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.

பக்கத்தில் எனது கணவர் திருதிருவென விழித்துக்கொண்டிருந்தார். "என்ன நடந்தது?" என்று கேட்டேன். "ஆட்டிறைச்சி சாப்பிடுவீர்களா? என்று கேட்டார். 'ஆம்,' என்றதும் இதைக்கொண்டு வந்து கிடத்தி விட்டுப் போகிறார்," என்றார்.

"என்ன செய்வது? யாரிதை வெட்டுவது அப்படியே rabish bin இல் போட்டு விடுவோமா?" என்று கேட்டார். அப்படிப் போடுவதானாலும் துண்டுகளாக வெட்டித்தான் போட வேண்டும் "நீங்கள் இப்போ போய் நண்பர் சந்தோஷை அழைத்து வாருங்கள் பின் என்ன செய்வதென்று யோசிப்போம்," என்றேன்.

என் கணவர் என்ன சொன்னாரோ சந்தோஷும் (இவர்தான் பக்கத்து வீட்டுக் குட்டிப் பெண்களின் தந்தை.) தன்னிடமிருந்த பெரிய கத்தியுடன் வந்தார். அது மரக்கறி வெட்டத்தான் உபயோகப்படும். வந்து ஆட்டைப் பார்த்துவிட்டு, "ஓ! அங்கிள் இதனால் வெட்ட முடியாது," என்று சொல்ல என்னிடமிருந்த ஓரளவு பெரிய கத்தி ஒன்றைக் கொடுத்தேன்.

"இன்று நீங்கள் என்னை ஒரு butcher ஆக்கி விட்டீர்கள்," என்று சிரித்தவாறே வெட்டத் தொடங்கினார். உதவியாளராக நான். ஐந்தேகால் மணிக்குத் தொடங்கிய வேலை அரை மணி நேரத்தில் முடிந்ததது.

அவரிடம் "உங்களுக்குத் தேவையான அளவு எடுத்துக் கொண்டு மீதியை இந்தப் பொலிதீன் பைகளில் போட்டு விடுகிறீர்களா?" என்று கேட்டேன். எல்லா வேலைகளும் முடிந்ததும் இரண்டு பைகளை எடுத்துக் கொண்டு போய் இரண்டு நண்பர்கள் வீட்டில் கொடுத்து விட்டு வந்தார். மற்றவைகளை மறுநாள் வேறு மூன்று நண்பர்கள் வந்து எடுத்துக் கொண்டு போனார்கள். அன்று அந்த மேசையைச் சுத்தம் செய்யும் வேலையும் என்னுடையதாயிற்று.

அடுத்த தடவை அந்த நண்பரைச் சந்தித்த போது எங்களுக்கு இனிமேலும் இப்படி வேலை தராதீர்கள் என்று அன்பாகக் கேட்டுக் கொண்டோம்.

மேலே இருப்பது என் பேரன் பாடசாலையில் படித்த காலத்தில் செய்த ஒரு ப்ரொஜெக்ட்.

13 கருத்துகள்:

 1. அம்மா நலமா?

  நல்ல அனுபவம் :)

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. இந்தாங்கோ o.

  இதுவும் உங்களுக்கே. [_00_] ;)

  அங்க என்னைப் பார்த்து சிரிசீங்க. மாட்டிட்டீங்க இப்ப. ;D

  பதிலளிநீக்கு
 3. இமா ஹஜ்ஜுப்பெருநாள்(பக்ரீத்) நினைவு வந்துவிட்டது.அந்த ஆர்ட் & கிராஃப்ட் ஒர்க் அருமை.

  பதிலளிநீக்கு
 4. செபா அம்மா பாவம் இமா... அவங்களுக்கே கொடுத்துவிடுங்கோ...:)))

  //இந்தாங்கோ o.

  இதுவும் உங்களுக்கே. [_00_] ;)//

  பதிலளிநீக்கு
 5. //பெரிய அதிர்ச்சி. எங்கள் சமையலறை மேசையில் முழு ஆடு (உரித்ததுதான்) கிடத்தப்பட்டு மேசை முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.//

  ஹா..ஹா..கொடுப்பவர் துண்டு துண்டா கொடுத்திருந்தா இந்த கஷ்டம் வந்திருக்காது.

  ’’குடுக்கிற தெய்வம் கூரையை பிச்சிகிட்டு குடுக்கும் ’’ பழமொழி நினைவுக்கு வருது..

  பதிலளிநீக்கு
 6. ஜெபா.. ஆன்ரி, உங்கள் அனுபவக் கதை நம்பமுடியவில்லை, முடிவுவரை பகிடியாக்கும் என்றே நினைத்தபடி வாசித்தேன்.... நியூசிலாந்து என்றமையால் ”செம்மறி ஆடு”தானே???.

  பி.கு:
  (ஜெபா ஆன்ரி, இது உங்களுக்கல்ல, நீங்கள் இதைப் படிக்க வேண்டாம்)

  வயசான காலத்தில:), ஆளாளுக்கு பொருள் கொடுத்து உதவுவது வழமைதானே... நான் “கண் + நாடி” யைச் சொன்னேன்:)

  பதிலளிநீக்கு
 7. அன்புள்ள ஹைஷ்,
  அது குதிரையல்ல. ஆடு தான். அதில் இருப்பவர் எனது இரண்டாவது பேரன்.
  நான் நலம். நன்றி.

  ஆசியா,
  வருகைக்கும் பதிவுக்கும் மிக்க நன்றி.

  ஜெய்லானி,
  கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு தருவதற்குப்
  பதிலாக கதவைத் தட்டிக் கொண்டும் தரும் என்பது எனது அனுபவம்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 8. செபா ஆன்டி!!! அங்கே ஒருவர் மட்டின் ரோல் மட்டின் ரோல் என்று ரோலாகிட்டு இருக்காங்களே அவங்களுக்கு ஒரு பார்சல்...அப்படியே எனக்கும்...( பக்கத்து இலைக்கும் பாயாசம்....)

  பதிலளிநீக்கு
 9. அதிரா,
  பகிடியாகத் தோன்றும் பல அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டுள்ளன.
  அது செம்மறியல்ல. wild goat. நண்பர் வேட்டைக்குப் போய்க் கொண்டு வந்தது.
  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 10. இலா,
  நிச்சயமாக உங்களுக்கும் அப்படியே பக்கத்து வீட்டுக்கும்
  பார்சல் அனுப்புகிறேன், மீண்டும் கிடைத்தால்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. ஆஸியா! என்னது! இங்க வந்து இமாவுக்குப் பின்னூட்டமா!! ;)

  ~~~~~~~~~~~~~~

  ஹைஷ், //செபா அம்மா பாவம் இமா... அவங்களுக்கே கொடுத்துவிடுங்கோ...:)))
  அப்ப.. வடைகூட வேணாமா?

  ~~~~~~~~~~~~~~

  அதீஸ்,
  //ஆளாளுக்கு பொருள் கொடுத்து உதவுவது வழமைதானே// இருங்க, மாட்டுவீங்க. பூனைக்கு ஒரு காலம் வந்தால் ஆமைக்கும் ஒரு காலம் வரும். ;)

  பதிலளிநீக்கு
 12. அன்புள்ள ஜெய்லானி,
  அடிக்கடி விருது வழங்குகிறீர்கள். மிக்க நன்றி.

  அன்புடன்,
  செபா.

  பதிலளிநீக்கு