செவ்வாய், 20 ஜூலை, 2010

பிறந்த நாள் பரிசு

வருகிற சனியன்று குட்டிப் பெண் அனிக்காவின் பிறந்தநாள்.

இவளது முதலாவது பிறந்தநாள் உணவகம் ஒன்றில் நன்றாகக் கொண்டாடப்பட்டது. அடுத்த வருடம் தங்கை அனன்யாவும் பிறந்து விட்டதோடு அவர்களது தாய் வழிப் பாட்டியும் இறந்து விட்டார். எனவே ஆரவாரமாகப் பிறந்தநாள் கொண்டாடுவது நின்று விட்டது. உறவினர் எல்லோருமே இந்தியாவில் வசிப்பதால் எங்களை மட்டுமே அழைத்து வீட்டில் கேக் வெட்டி இரவு உணவும் தருவார்கள்.
அனிக்காவிடம் "இம்முறை என்ன பிறந்தநாள் பரிசுகள் கிடைக்கும்?" என்று கேட்டேன்.

"அப்பாவிடம் அவரது கார் போலப் பெரிய கார் வாங்கித் தரும் படி கேட்டிருக்கிறேன். அம்மா எனக்கு நல்ல கமரா வாங்கித் தருவா" என்றாள்.

"சரி. நாங்கள் என்ன தரவேண்டும்?" என்று கேட்டேன். தயங்காமல் வந்த பதில் "அழகான பெரிய சாறி வேண்டும்."
அவளது பதிலைக் கேட்டதும் "நன்றாகப் பெரியவளாக வளர்ந்ததும் இவைகளை நீ கேட்காமலே நாங்கள் வாங்கித் தருவோம்." என்று தாய் சொன்னா.
இது அவர்கள் வீட்டு வாசலில் உள்ள பூஞ்செடி.

14 கருத்துகள்:

 1. //"அழகான பெரிய சாறி வேண்டும்."//
  வளரும் பயிரை முளையிலே தெரிகிறது. ;)))

  பதிலளிநீக்கு
 2. அனிக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

  பதிலளிநீக்கு
 3. //தயங்காமல் வந்த பதில் "அழகான பெரிய சாறி வேண்டும்."//

  அப்ப வீட்டிலுள்ளவர்கள் குழந்தையின் முன்னிலையில் நல்ல உடையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ((காலம் கெட்டு கிடக்கே..சாட்டிலைட் டீவீ.....))

  பதிலளிநீக்கு
 4. அனிக்காவுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. //காலம் கெட்டு கிடக்கே..சாட்டிலைட் டீவீ..//
  ம். ;) அப்படி இருக்கவும் கேட்டு இருக்கிறது சேலைதான் என்பதைக் கவனிக்க வேணும் ஜெய்லானி. அந்த வகையில் பெற்றோரைப் பாராட்டத்தான் வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. இது அவர்கள் வீட்டு வாசலில் உள்ள பூஞ்செடி. /// ஜெபா ஆன்ரி, இப்பூச்செடிதான் இங்கும் ஜூலை மாதத்தில் எல்லா இடமும் வளர்கிறது, இது இங்கத்தைய இயற்கை மலர்களில் ஒன்று, காட்டுப்பகுதியிலும் தன் பாட்டில் பூத்திருக்கு. படங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறேன் என் ஆல்பத்தில் போட.

  அனிக்காவின் பிறந்தநாளை இனிதே கொண்டாடுங்கோ.

  பதிலளிநீக்கு
 7. அப்பூஞ்செடியின் பெயர் எனக்குத் தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 8. ஹைஷ்,
  வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. நிச்சயமாக உங்கள் வாழ்த்துக்களை அனிக்காவிடம் தெரிவிப்பேன்..

  பதிலளிநீக்கு
 9. ஜெய்லானி,
  பெற்றார் இருவரும் வேலைக்குப் போய் வந்தாலும் பிள்ளைகள் மட்டில் மிக அன்பாகவும் அவதானமாகவும் இருக்கிறார்கள். மூன்று நாட்கள் மட்டுமே சிறுவர் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்புவார்கள். மற்ற நாட்களில் இரண்டு நாட்கள் தாயும் இரண்டு நாட்கள் தந்தையும் அவர்களைக் கோயில், சிறுவர் பூங்காக்கள் அழைத்துப் போவார்கள். சிறுவர்களுக்கான cd களைப் பார்க்க விடுவார்கள். ஹிந்தி திரைப்படங்கள் பார்த்தாலும் அவற்றில் வரும் ஆடைகளில் நாட்டமில்லை வளர்ந்த பின்னரும் இவ்வாறே இருப்பார்களா? இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 10. அதிரா,
  இங்கும் இந்தத் தாவரம் பல வேறு வர்ணங்களில் பூத்துக் குலுங்கும் .
  எனக்குப் பெயர் தெரியாது. இப்போதான் இமாவின் பதிவில் பெயர் இருப்பதைக் கண்டேன். உங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 11. இமா,
  தாவரத்தின் பெயர் குறிப்பிட்டமைக்கு நன்றி.
  வளரும் பயிர்கள் இப்படியே வளர வேண்டும் என்பதே என் ஆசை.

  பதிலளிநீக்கு
 12. அனிக்காவுக்கு முகம் தெரியா மனிதனின் பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. தேவன் மாயம்,
  நல்வரவு. தங்கள் வாழ்த்துக்கள் அனிக்காவிடம் சேர்ப்பிக்கப்பட்டு விட்டன.
  வாழ்த்துக்களுக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.
  அன்புடன் செபா.

  பதிலளிநீக்கு