செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

அனிக்காவின் ஐந்தாவது பிறந்தநாள்

கடந்த இருபத்து நாலாம் தேதி அனிக்காவிற்கு ஐந்தாவது பிறந்த நாள்.
'Gate Way' என்னும் உணவகத்தில் 'party ' ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பிருந்தே அனிக்கா  அழைக்கத் தொடங்கி 
விட்டாள்.

பிறந்த நாள் அன்று காலை வாழ்த்தலாம் எனத் தொலை பேசியில் அழைத்தேன். அனன்யாவின் குரல் கேட்டது, "கிராண்ட்மா நமஸ்தே!
இன்று அனிக்காவின் ஐந்தாவது பிறந்த நாள்." "ஆம், அனிக்காவிடம்
ரிசீவரைக் கொடுங்கள்." என்றேன்.

அனிக்கா வாங்கியதும் வாழ்த்தினேன். "நன்றி, நீங்கள் இன்று மாலை வரவேண்டும்." என்றாள். "எங்களிடம் கார் இல்லையே! நாங்கள் எப்படி வருவது? ஒரு காரில் ஆறு பேர் போக முடியாதல்லவா?" என்றேன்.

"எங்கள் காரில் ஏழு பேர் போகலாம். பப்பாவும் க்ராண்ட்பாவும் முன்னால் இருக்க நீங்கள் எனக்கும் அனன்யாவிற்கும் நடுவிலும் மம்மா பின்னாலும் உட்காரலாம்." என்றாள்.
மாலை நாலு மணிக்கு சந்தோஷ் கேக் பெட்டியைக்  கொண்டு வந்து
எங்கள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து  விட்டு, "ஆறு மணிக்கு
தயாராயிருங்கள் போகலாம்." என்றார்.
ஆறு மணிக்கு வந்தவர் "ஆன்டி, இப்போ அங்கிள் என்னோடு வரட்டும்,
நீங்கள் எங்கள் வீட்டில் இருங்கள். நான் திரும்ப வந்து உங்கள்
எல்லோரையும் அழைத்துப் போகிறேன்." என்று சொல்லி கேக்
 பெட்டியையும் எடுத்துப் போனார்.

நான் அவர்கள் வீட்டில் போய் இருந்தேன். அனிக்கா அருகில் வந்து, "கிராண்ட்மா, அங்கு எங்கள் ஆசிரியர்களும், மம்மா பப்பாவின் நண்பர்களும் வருவார்கள்." என்று சொன்னாள்.

அங்கு எல்லா ஆயத்தங்களும் முடிந்ததும் சந்தோஷ் வந்து எங்களை அழைத்துப் போனார். போனதும் அனிக்காவும் அனன்யாவும் தங்கள்
ஆசிரியர்களுக்கு எங்களை அறிமுகம் செய்து வைத்தார்கள். சந்தோஷ் ஏனையோரை அறிமுகம் செய்து வைத்தார்.
 
அறிமுகம் செய்து வைக்கப்பட்டதும் குளிர் பானம் வழங்கப்பட்டு
விருந்து தொடர்ந்தது. தந்தூரி சிக்கன், கட்லட், நான் ரொட்டி, சிக்கன் கறி, பிரியாணி என்பன பரிமாறப்பட்டன. பின்னர் பிறந்த நாள் வாழ்த்துப் பாடி கேக் வெட்டப்பட்டது. கேக் பரிமாறிய பின் கடந்த ஐந்து வருடங்களாக அனிக்காவைப் பராமரித்து வந்த ஆசிரியைகளைப் பாராட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்தார் சந்தோஷ்.பிறகு எல்லோரும் புறப்பட நாங்களும் புறப்பட்டோம்.

வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் "பார்ட்டி பிடித்திருந்ததா?" என்று அனிக்கா
கேட்டாள். "நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
பெரும் மகிழ்ச்சி.

10 கருத்துகள்:

  1. //நன்றாகப் பிடித்தது." என்று சொல்ல முகத்தில்
    பெரும் மகிழ்ச்சி. //

    சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான் :-))

    பதிலளிநீக்கு
  2. நல்ல ஒரு Birthday Party... நல்லா எஞ்ஜோய் பண்ணியிருக்கிறீங்க. ஏன் ஜெபா அன்ரி, இமா உங்களுக்குப் போக்கு வரத்துக்கு உதவுவதில்லையோ?:), இமாவுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))).

    பதிலளிநீக்கு
  3. //சந்தோஷத்துல பெரிய சந்தோஷமே அடுத்தவங்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிறதுதான் :-)) // இத எங்கயோ பார்த்திருக்கிறேனே:)))... இப்போ நி...யாபகம் வருகுதில்லை:)))).

    பதிலளிநீக்கு
  4. ;))

    அதீஸ்... இது வேற கதை. இந்தக் கதையில... நாங்கள் வெளி ஆட்கள். அவை வீட்டுக்காரர்.

    மம்மிக்கு நான் எப்பிடியோ அப்பிடித்தான் சந்தோஷும் அனிதாவும். அவங்கள் செய்தால் என்ன நான் செய்தால் என்ன. சில நேரம் அவங்களின்ட ஆசைக்கும் விட வேணும் அதிரா. பாஷை தெரியாட்டிலும் தங்கட தாய் தகப்பன் எண்டு நினைச்சு நடத்துகினம். சின்னன்களும் இவங்கள்தான் தங்கட சொந்தப் பாட்டா பாட்டி என்று நினைக்கினம். பிறந்த முதல் நாளில இருந்து மம்மி டடாவோடதான் ரெண்டு சின்னனும். உரிமையோட செய்யிறாங்கள், தடுக்கப்படாது. பிரிச்சுக் காட்டுறம் எண்டு நினைச்சுத் துக்கப்படப்படாது அவங்கள்.

    வேற எங்கயும் போறது எண்டால் நாங்கள் கூட்டிக் கொண்டு போவம். இவங்கள்... மம்மிக்கு இன்னொரு 'இமா குடும்பம்'தான். ;)

    பதிலளிநீக்கு
  5. ஜெய்லானி,

    இந்தக் குழந்தைகள் எங்களுடன் மிகப் பிரியமாக
    இருக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியாக இருந்தால் அதில் பங்கு எங்களுக்கும்தானே.

    முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி
    போதுமா அல்லது குச்சி மிட்டாய் தரட்டுமா?

    பதிலளிநீக்கு
  6. அதிரா,

    மிகமிக நன்றி. இமா எங்களுக்கு வேண்டிய எல்லா
    உதவிகளும் செய்கிறா. ஆனால் இந்த உதவி மட்டும் செய்ய முடியாது. சந்தோஷ், ஏழு பேர் பயணிக்க ஏற்ற வாகனம் வாங்கியதே எங்களையும் அழைத்துப் போவதற்காகத்தானே.
    பீச், பார்க் என்று போகும்போது எங்களையும் அழைத்துப் போவார்கள்.

    மீண்டும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. //முதலாவதாக வந்து பதிவிட்டதற்கு நன்றி
    போதுமா அல்லது குச்சி மிட்டாய் தரட்டுமா?// ஹிக்! ;)))

    பதிலளிநீக்கு
  8. எப்படியே அனிககாவின் பிறந்த நாளை முன்னிட்டு நீங்கள் சந்தோஷமாக இருந்த மகிழ்சியே

    பதிலளிநீக்கு
  9. ஜலீலா,
    அனிக்காவின் பிறந்தநாள் எங்களுக்கு
    இனிமையான நாள்தான். அவர்கள்
    குறும்பும் கும்மாளமும் எங்களுக்கு
    மகிழ்ச்சியாக இருக்கிறது.
    நன்றி.

    பதிலளிநீக்கு