புதன், 24 மே, 2017

மீண்டு(ம்) வந்தேன்

இன்று முதல்...

      'இதயத்திலிருந்து' வார்த்தையாக வெளிவருபவை இமாவின் விரல் வழியே இங்கு பதிவாகும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்...றோம்.


இப்படிக்கு...

செபா & இமா 


@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->--@}->---


வெகுநாட்கள் கழித்து - ஆறு வருடங்கள் கழித்து வந்திருக்கிறேன். முதலில்                                                                           வணக்கம். _()_


என்னைப்பற்றி அன்போடு விசாரிக்கும் நட்புகளுக்காக ஒரு செய்தி. நான் நன்றாக இருக்கிறேன்.

இப்பொழுது ஓர் ஓய்வு இல்லத்தில் இருக்கிறேன். இது முதியோர் இல்லம் அல்ல; ஒய்வு இல்லமேதான்.

இங்கு என்னை நன்றாகப் பார்த்துக்கொள்கிறார்கள்; எனக்கு வேண்டிய எல்லா உதவிகளும் கிடைக்கின்றன. தினமும் என் அறையைச் சுத்தம் செய்கிறார்கள். படுக்கையைத் தட்டிப் போடுகிறார்கள்,  குளிக்க வைக்கிறார்கள், உடை மாற்றிவிடுகிறார்கள், தேவைப்படும் போது உணவைச் சின்னதாக வெட்டியும் கொடுக்கிறார்கள். முழு நேர மருத்துவ கண்காணிப்போடு வாழ்க்கை போகிறது. சந்தோஷமாக இருக்கிறேன்.

6 கருத்துகள்:

 1. ஹாய் செபாம்மா! நலமாக இருப்பதை பார்த்து( கேட்டு)ரெம்ப மகிழ்ச்சி. நல்லாரோக்கியமாக மகிழ்ச்சியாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.
  இமா விரல் வழியா இங்கு பதிவு பதிவது சந்தோஷம். இப்படியாவது இமா வரட்டும்..டும். (ஸ்மைலி போடமுடியலையே)

  பதிலளிநீக்கு
 2. ரொம்ப மகிழ்வா இருக்கும்மா, நீங்க இன்னும் மகிழ்வோடும் நலமோடும் இருக்க என் பிரார்த்தனைகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 3. Aunty, nice to hear from you. We miss your post and crafts. Take care ��

  பதிலளிநீக்கு
 4. செபாம்மா உங்களுக்கு என் அன்பும் பிரார்த்தனைகளும்.அண்ட் ஹக் அண்ட் கிஸ் .அழகான சிரிப்பு

  பதிலளிநீக்கு