புதன், 10 மார்ச், 2010

பக்கத்து யுனிட் குட்டிப்பெண்கள் பாகம் - 2

இன்று காலை நடக்கப் போவதற்காக (walk) நாங்கள் எங்கள் 'ட்றைவ்வே'யைத் தாண்டிப் போய்க் கொண்டிருந்த போது பின்னால் "க்ரான்ட்மா, க்ரான்ட்பா" என்று சத்தமிட்டபடி குட்டிப் பெண்கள் ஓடி வந்தார்கள். எங்களுடன் வரவேண்டுமென்று அடம் பிடிக்கவும் அவர்களது தாயும் வரவே எல்லோரும் நடையைத் தொடர்ந்தோம். பேச்சும் தொடர்ந்தது.

"எங்கே போய் வருகிறீர்கள்?" இது நான்.
"சிங்கிள் பார்க்கிற்கு." இது பெரிய பெண்.
"வேறு என்ன பார்க்கிற்குப் போவீர்கள்?"
"சிறிய பார்க்கிற்கும், பெரிய பார்க்கிற்கும் போவோம்."
"ஓ! அப்படியா? பெரிய பார்க் எங்கே இருக்கிறது?"
"அது மிகத் தூரத்தில் இருக்கிறது. அப்பா எங்களைக் கூட்டிப் போவார். சீசோ, ஊஞ்சல்கள், ஸ்லைடர்கள், இன்னும் பல விளையாட்டுக்கள் அங்கே விளையாடலாம். மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை," என்று சொல்லிக் கதையை நிறுத்தினாள்.

எனக்குப் பழைய கதை ஒன்று நினைவுக்கு வருகிறது.


சில மாதங்களுக்கு முன் ஒரு செவ்வாய்க்கிழமை, செவ்வாயும் புதனும் அவர்களின் தாய்க்கு விடுமுறை. எனவே குழந்தைகளும் வீட்டில் இருப்பார்கள். அவர்கள் வீட்டில் பெரும் பரபரப்பாக இருந்தது. தாய் உடைகளைக் கழுவுவதற்காகச் சலவை இயந்திரத்தில் போட்டுவிட்டு வந்து பார்த்திருக்கிறார். காற்றுக்குக் கதவு பூட்டுப்பட்டு விட்டது. பிள்ளைகள் உள்ளே. சாவியும் உள்ளே. மறுபுறம் முழுவதும் கண்ணாடிச் சுவர். அந்தப் பக்கம் சென்று பெரியவளைக் கதவைத் திறக்கும்படி கெஞ்சிக்கொண்டிருந்தார். அவளுக்கோ எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. இருவரும் திருதிருவென விழித்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். பிறகு, எங்கள் போனில் அவர்கள் தந்தையை அழைத்துச் சொல்ல அவர் வந்து திறந்து விட்டார். பெரியவள் 'விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை' என்பது போல் "க்ரான்ட்மா! எனது நகங்களுக்குப் பொளிஷ் போட்டதால் தான் என்னால் திறக்க முடியவில்லை" என்றாள். ஆனால் இப்போது கதவைத் திறக்கும் அளவு வளர்ந்து விட்டாள்

9 கருத்துகள்:

  1. ஹ்ம்! உங்கள் வீட்டுக் குட்டிப் பெண்ணைப் பற்றிச் சொல்ல எதுவுமேஏ... இல்லையா!!!!! ;)

    பதிலளிநீக்கு
  2. //ஹ்ம்! உங்கள் வீட்டுக் குட்டிப் பெண்ணைப் பற்றிச் சொல்ல எதுவுமேஏ... இல்லையா!!!!! ;)// இது ரொம்போ ரொம்போ ஓவர் ஆன்ரீ...கிரான்மா, ஆன்ரி செய்த வால்தனங்களை எல்லாம் பப்ளிக்கா எடுத்து சொல்லிடுங்கோ..ஓ..ஓ! :))) :D

    பதிலளிநீக்கு
  3. வால்!! அது பப்பீஸுக்குத் தானே இருக்கும்!! ;D

    பதிலளிநீக்கு
  4. Jeba Aunty!!!நீண்ட நாளின் பின் எட்டிப்பார்த்ததுபோல இருக்கு.... தொடருங்கோ.. நீங்கள் மரக்கறித்தோட்டம் ஏதும் செய்வதில்லையோ? அல்லது உங்கடையைத்தான் படமெடுத்து, இமா தன்ர மாதிரிக்காட்டுறாவோ? கடவுளே என்னைக் காப்பாத்துங்கோ ஜெபா ஆண்ட்ரி உங்கட மகளிடமிருந்து....

    வால்!! அது பப்பீஸுக்குத் தானே இருக்கும்!! ;D/// அதாரது வாலைப்பற்றிக் கதைப்பது... பிறகு எனக்கும் கெட்ட கெட்ட கோபம் வரும்....கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  5. செபா ஆன்டி! எப்படி இருகீங்க? ஆமா ஆமா.. இமாவின் வால்தனங்கள் பத்தி ஒரு தொடர் போடுங்க :)) மீ த எஸ்கேப்பூஊஊஊஊ....

    //மாடுகள், செம்மறி ஆடுகள், பறவைகள் எல்லாம் பார்க்கலாம். ஆனால் அவையொன்றும் உடைகள் போடவில்லை,"

    இவ‌ங்க‌ளுக்கு தான் என்ன‌ ஒரு இமாஜினேஷ‌ன் :))

    பதிலளிநீக்கு
  6. ஜீனோ,
    உண்மையாகவே அவர்களது வால்தனம் அதிகம் தான். சற்று முன்னர் கூட எனது பழைய சட்டையைப் பார்த்து, 'ஓ! அழகாயிருக்கிறது உங்கள் உடை. ஆனால் நீங்கள் அழகாயில்லை,' என்றாள் பெரியவள். சின்னவள், இடுப்பையசைத்து அழகு காட்டிவிட்டு என் கையை முத்தமிட்டு 'நாங்கள் டாக்டரிடம் போகிறோம். பை பை கிராண்ட்மா. பை பை pussycat.' என்றுசொல்லிக்கொண்டு ஓடிவிட்டாள்.

    பதிலளிநீக்கு
  7. அதிரா,
    என்னையும் உங்களைப்போல் நினைக்கலாமா? மெதுவாகத்தான் இயங்க முடிகிறது. இப்போ நான் தோட்டம் செய்வதில்லை. கடந்த மூன்று வருடங்கள் சிறியதாகத் தோட்டம் செய்தேன். எங்கள் வீட்டுச் சொந்தக்காரர் பார்த்துவிட்டு எனக்கு மிளகாய்சசெடிகள் lettuce,silver beet கன்றுகள் கொண்டு வந்து தந்தார். அதே போல் முதல் யூனிட் பெண்ணும் சில செடிகள் தந்தார். இப்போ எல்லாம கைவிட்டாயிற்று.

    பதிலளிநீக்கு
  8. இலா,
    குட்டிப்பெண்களின் கற்பனை மிக அதிகம் தான். பேச்சுக்கொடுத்து தப்பிக்கவே முடியாது.
    நிச்சயமாக எனது பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,எனது மாணவர்களின் குறும்புத்தனங்கள் பற்றியெல்லாம் எழுதுவேன், ஆனால் கரடி பிறை காண்பது போல் எப்போதாவது தான் பதிவுகள் வரும்.

    பதிலளிநீக்கு
  9. ஹலோ கரடி,
    இன்னும் பிறை காண இல்லையா? ;)

    பதிலளிநீக்கு