ஏற்கனவே தீர்மானித்திருந்தபடி இன்று காலை பேரன் வந்து இரத்தப் பரிசோதனை செய்வதற்காக 'lab' இற்கு அழைத்துப்போனார். உள்ளே பதினான்கு பேர் அமர்ந்திருந்ததைக் கண்டதும் இன்று மதியம் தான் 'காலை உணவு சாப்பிடலாம்' என்று நினைத்தேன். நேற்று இரவு உணவு எட்டு மணிக்குச்சாப்பிட்டது என்று யோசித்தபடி உட்கார்ந்தோம். ஐந்தாவது நிமிடமே என்னை அழைத்தும் ஆச்சரியத்தோடு எழுந்து சென்றேன். வெளியே வருகையில் கணவர் மறு அறைக்குள் போயிருந்தார்.
பதினைத்து நிமிடங்களில் முடிந்துவிட வீடு வந்து சேர்ந்தோம்.
காலையுணவை முடித்துவிட்டு ஓய்வெடுக்க நினைக்கவும் போனில் அழைப்பு வரவும் சரியாயிருந்தது. போனில் குட்டிப்பெண் அனான்யா "கிராண்ட்மா நாங்கள் கோவிலுக்குப் போகிறோம். நீங்களும் வாருங்கள்." என்றார். மறுக்க முடியவில்லை. புறப்பட்டோம். வழி எல்லாம் ஒரே கும்மாளம். "bus" இல் ஏறினவுடன் 'எங்கே பெல்ட்?' என்று கேட்டார்கள்.
கோவிலில் வழிபாடு முடிந்ததும் அண்மையில் இருந்த எங்கள் நண்பர்களின் விடுகளுக்கும சென்று,
வீட்டுக்குத் திரும்பிய போது மணி இரண்டைத் தாண்டியிருந்தது.
வியாழன், 25 மார்ச், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
அம்மா, நலமா?
பதிலளிநீக்குகுட்டி குட்டியாக நல்லா எழுதறீஙக!
என் ப்ளாக் வந்து அவார்ட்டை எடுத்துக்கோங்க!
செபா ஆண்ட்ரி, டயறிபோல எழுதுறீங்கள், இதுவும் நன்றாகத்தான் இருக்கு தொடருங்கோ....
பதிலளிநீக்குசெபா ஆண்டி நலமா?
பதிலளிநீக்குஆஹா சூப்பரா இருக்கு பிளாக்,
மிக்க நன்றி செல்வி உங்கள் பாராட்டுக்கும் விருதுக்கும்.
பதிலளிநீக்குஉங்கள் வலைப்பூவைத் திறந்து பார்க்க முடியவில்லை. மகள் இமா பார்த்துச்சொன்னா.
அதிரா உங்களுக்கும் எனது நன்றிகள்.
ஜலீலா, நன்றிகள் பல.