வியட்னாம் நண்பி எங்களை ஒரு நாள் விருந்துக்கு வரும்படி அழைத்தார். நான் மறுக்கவும் காரணம் கேட்டார். "ஒவ்வாமை காரணமாக அநேக உணவுகளை நான் சாப்பிட முடியாது என்றேன்." பரவாயில்லை உங்களுக்குச் சரிவராதவற்றை விட்டு விடுகிறேன். நாளை எனது தாய்லாந்து நண்பி ஊருக்குப்போகிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும். கட்டாயம் வரவேண்டும்." என்று வற்புறுத்தினார். அவரது கணவர் வந்து எங்களைக் காரில் அழைத்துப் போனார். தாய்லாந்துப்பெண், அவர் கணவர் நியூஸிலாந்தைச சேர்ந்தவர். அவர்களது குழந்தை, எங்களது நீண்ட நாள் நண்பி ஜெசி, குழந்தைகள் இருவர், இன்னுமோர் சீனப் பெண், இத்தனை பேர்தான் விருந்துக்கு வந்தவர்கள். உள்ளே போனதுமே எனக்குச் சமையல் வாசனையில் மூச்சுத் திணற ஆரம்பித்தது. நான் "inhaler" ஐ எடுத்துக்கொண்டு சற்று நேரம் வெளியே நின்று விட்டேன். திரும்ப உள்ளே வந்தவுடன் ஜெஸியின் குழந்தைகள் அருகில் வந்து உட்கார்ந்து விட்டார்கள். சாப்பாட்டு மேசைக்குப் போகும் வரை அவர்கள் அசையவில்லை. பின்னர் அறிமுகப்படலம் நடந்தது. சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பிறகு, சாப்பிட அழைத்தார்கள். மேசையில் எனக்காகவென பிரியாணி, சிக்கன் கறி, சலட் என்பன தயாராக இருந்தன. மேலும் பல உணவுகள் தயாராக இருந்தாலும எனக்கு ஏற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டதாகப் பேர் பண்ணிவிட்டு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு மீண்டும் வீடு வந்தோம். அன்றையப் பொழுது இனிமையாகக் கழிந்தது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இனிமையான சந்திப்புக்கள்
பதிலளிநீக்குஉங்க கம்ப்யூட்டரில் வைரஸ் பிராப்ளம்ன்னு தோனுது பாருங்க .
ஜெய்லானி, எதை வச்சு சொல்றீங்க என்று சொல்லுங்க. ;) இப்படி மொட்டையா சொன்னா எப்புடி!! நமக்கே புரியல. ;( அம்மா யோசிக்கப் போறாங்க. அப்பிடியே என்ன பண்ணணும் என்று நினைக்கிறீங்க என்கிறதையும் சொன்னீங்க என்றால் உதவியா இருக்கும்ல. ;) எனக்கு ஒண்ணுமே பிரச்சினையா தெரியலையே!! ஏதாவது சொன்னீங்க என்றால் பசங்களை விட்டுப் பாக்க வைக்கலாம். கரிசனமா வந்து சொன்னதுக்கு நன்றி. ;)
பதிலளிநீக்குஜெய்லானி,
பதிலளிநீக்குபிரச்சனை தான். அதனைப்பார்க்கவோ சரி செய்யவோ எனக்குத்தெரியாது. இன்டெர்நெட் தாமதமாகத்தான் திறபடுகிறது. பேரன் வந்து தான் பிரச்சனை என்னவென்று பார்த்து சரி செய்ய வேண்டும்.
எனது நன்றிகள்.
Enjoy Mum. ;)
பதிலளிநீக்குஅன்பு ஜெய்லானி,
பதிலளிநீக்குஅம்மா இங்கு வெளியிடச் சிறிது நேரம் முன்பாக எனக்கு இதனை அனுப்பி இருந்தார்கள். ஏற்கனவே படித்து விட்டதால் இடுகையைச் சரியாகக் கவனிக்கவில்லை.
அவர் கணணி வேகம் குறைந்து இருந்தது புரியாமல் இடுகையை மீண்டும் மீண்டும் பிரதி செய்திருக்கிறார். ;)
என்னிடம் முன்பே பலமுறை சொன்னார். நான் வேறு எங்கு எல்லாமோ தேடி விட்டு எனக்கு எல்லாம் ஒழுங்காகத் தெரிகிறது என்று சொல்லி விட்டேன். ;)) இன்று அவர் வீட்டுக்குப் போய் இருந்தேன். எல்லாம் தெளிவாயிற்று. ;)
இப்போ சரிதானே? இன்னும் ஏதாவது சரி செய்ய வேண்டி இருந்தால் சொல்லுங்கள். உதவிக்கு மிக்க நன்றி ஜெய்லானி. ;)
அன்புடன் இமா
உங்க பதில இப்பதான் பாத்தேன் ஸாரி பதில் போட லேட்டாயிடுச்சி. ட்ரோஜான் வைரஸ் இப்படி செய்யும் .நெட் யூஸ் பண்ணுவதுக்கு முன்ன ஆண்டி வைரஸ் ஆல் செக் பண்ணிட்டு யூஸ் பண்ணுங்க.
பதிலளிநீக்குசில நேரம் அதுவா நாலு இடத்துல காப்பி ஆகும். பிரிவியூ பாக்கும் போது தெரியவரும் . அதுக்கு பின்ன பப்லிஷ் பண்ணவும் .
இப்ப ஓக்கே!!. உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.
ஜெய்லானி,
பதிலளிநீக்குஉங்கள் பதிலுக்கு மிகமிக நன்றி. உண்மையைச் சொன்னால் எனக்கு கணணி பற்றி அதிகமாகத் தெரியாது. என் பேரப் பையன்களினதும், மகள் இமாவின் உதவியினாலும் தான் சிறிதளவு கணணியை
உபயோகிக்கிறேன். அவர்களிடம் தான் நான் ஆலோசனை பெற வேண்டும். உங்கள் அன்பான உதவிக்கு மீண்டும் நன்றி.
அன்புடன் செபா.