அத்தான்
பெரும்பான்மையாக புதிதாகப் பாடசாலையில் சேருகின்ற (அதாவது முதலாம் ஆண்டு) மாணவர்களுக்கே என்னை ஆசிரியராக நியமிப்பார்கள். முதல் நாள் அழுகையுடன் தான் அநேகர் வருவார்கள். அன்றும் தொடர்ந்து வந்த நாட்களிலும் பல சுவையான, மறக்க முடியாத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.
ஒரு மாணவரை, ஒருவர் வகுப்பில் விட்டு விட்டுப் போகவும் மாணவன் 'அத்தான், அத்தான்' என்று அழுது கொண்டு பின்னால் ஓடினார். ஒருவாறு சமாளித்து அழைத்து வந்து வகுப்பில் உட்கார வைத்தேன்.
சிறிது நேரத்தின் பின் அதிபர் வகுப்பைப் பார்வையிட வந்தார். அவர் என்னிடம் பேசி விட்டு வெளியே போகவும் சின்னவர் 'தம்பி, தம்பி இங்கே வாருங்கோ' என்று அழைக்க அதிபரும் நகைச்சுவையாகப் பேசுபவர், ' என்ன அண்ணே! உங்களுக்கு என்ன வேண்டும்?' என்றார். 'எனது அத்தானை வந்து என்னை வீட்டுக்கு அழைத்துப் போகச் சொல்லுங்கள்.' அதிபர் 'சரி அவர் வரும்வரை வகுப்பில் இருங்கள்,' என்றுசொல்லி விட்டுப் போனார்.
மதியம் அழைத்துப்போக வந்தவரிடம் 'மாணவன் உங்களுக்கு என்ன உறவு?' என்று கேட்டேன். 'நான் அவனுடைய அப்பா' என்றதும் தான் அவனது தாயார் அழைப்பதைக் கேட்டு அழைக்கிறான் என்பது புரிந்தது.
Seba aunty, very funny story. The boy looks very cute.
பதிலளிநீக்குஅனுபவம் அருமை....
பதிலளிநீக்குகிராண்ட்மா..இந்த படத்திலிருப்பவருக்கும்,இந்தக் கதைக்கும் சம்பந்தம் இல்லைதானே? ஜீனோக்கு தெரியுமே..ஜீனோக்கு தெரியுமே!:D :D :D :D :D
பதிலளிநீக்கும்ம்..நல்ல காமெடி..இன்னும் நிறைய காமெடி கதைகள் சொல்லுங்கோ. டாங்ஸூ!
நல்ல காமெடி .
பதிலளிநீக்குU r having a great time here rn't u Mum! ;) enjoy. ;)
பதிலளிநீக்குr u going to talk about that 'kilavi' under that staircase & 'naanum paalar thaane appaa!' too. ;)
Puppy watchout. She might publish ur story too. ;D
வானதி,
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி.
sankavi,
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி.
ஜீனோ,
பதிலளிநீக்குஇன்னும் பல அனுபவங்கள் இருக்கின்றன. பின்னர் எழுதுவேன். நன்றி.
ஜெய்லானி,
பதிலளிநீக்குதங்கள் பதிவுக்கு நன்றி.
இமா,
பதிலளிநீக்குமறந்திருந்த சம்பவங்களை நினைவு படுத்தியதற்கு நன்றி.
அம்மா,
பதிலளிநீக்குநலமா? குட்டி குட்டியா இருந்தாலும் நல்லா எழுதறீங்க! இமாவின் குறும்பையும் எழுதுங்க:-)
செல்வி,
பதிலளிநீக்குஉங்கள் விசாரிப்பிற்கு நன்றி. நான் நலம். இமாவின் தூண்டுதலால் தான் பதிவுகள் போடத்தொடங்கினேன். இயன்றவரை எழுதுவேன். மிக்க நன்றி.
அன்புடன் செபா.