எங்கள் விட்டிலிருந்து ஐந்து நிமிட நடை தூரத்தில் எங்கள் நண்பர்
வினோத் வசிக்கிறார்.
மூன்று வருடங்களின் முன்னர் அந்த இல்லத்தை வாங்கியதுமே எங்களுடன் பழக ஆரம்பித்து விட்டார். தாய், தந்தை, ஆணும் பெண்ணுமாக இரண்டு பிள்ளைகள் சேர்ந்த சிறிய குடும்பம். இலங்கையின் பெரும்பான்மை இனத் தவர்.
கடந்த கோடை விடுமுறையில் தாயகம் செல்லும் போது அவர்களது செல்லப்பிராணிக்கு (பூனைக்குட்டி) உணவு வைக்கும் படியும் சிறிய தோட்டத்திற்கு நீர் ஊற்றி விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள்.
அதற்காக அங்கு போய் வரும் போது இரவு வேளையில் வீட்டில் தங்கும் அவரது நண்பர் பண்டார என்பவருடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இவர் நன்றாகப் பகிடியாகப் பேசுவார். வினோத் குடும்பத்தாரைப் போலவே இனிய சுபாவங்கள் உள்ளவர்.
ஒன்றரை மாதங்கள், விடுமுறை முடிந்து வினோத் வந்ததும் நாங்கள் தினமும் போவது நின்று விட்டது.
இரண்டு வாரங்கள் கடந்த நிலையில் ஒரு நாள் நாங்கள் 'walk' போய்க் கொண்டிருக்கையில் பின்னால் யாரோ அழைப்பது கேட்கவே திரும்பினோம். பண்டார வியர்வை சொட்ட ஓடி வந்து "எங்கே போகிறிர்கள்? நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் உங்கள்
வீட்டிற்கு வரலாமா?" என்று கேட்டார். "சரி" என்றதும் காரை அடுத்த தெருவில் நிறுத்தியிருக்கிறேன். பிறகு வருகிறேன் என்று போய் விட்டார்.
நாங்கள் நடையை முடித்து வீடு வந்து பத்து நிமிடங்களில் வந்தார். "நான் காருக்குப் போய் விட்டு உடனே வருவேன்." என்றவர் மீண்டும் வரும் போது பொலித்தீன் பைகளில் பொருட்களுடன் வந்தார். அவற்றை வைத்து விட்டு மீண்டும் போய் இன்னும் சில பொதிகளை எடுத்து வந்து வீட்டினு ள் வைத்தார். "ஆன்டி, இவையெல்லாம் உங்களுக்குத்தான்." என்றார்.
பொருட்களைப் பார்த்து எங்களுக்கு ஒரே திகைப்பு. பால், பழங்கள், கீரைவகை, பலவித காய்கள் மட்டுமன்றி பாண், fozen chiken என்று இரண்டு வாரங்களுக்குப் போதுமான பொருட்கள் இருந்தன.
பொருட்களைப் பார்த்து எங்களுக்கு ஒரே திகைப்பு. பால், பழங்கள், கீரைவகை, பலவித காய்கள் மட்டுமன்றி பாண், fozen chiken என்று இரண்டு வாரங்களுக்குப் போதுமான பொருட்கள் இருந்தன.
நான் கொடுத்த பட்டியலின்படி அன்று காலை தான் ஒருவாரத்திற்குப்
போதுமான அத்தனை பொருட்களையும் மகள் வீட்டார் கொண்டு
வந்திருந்தார்கள்.
எதை எப்படி வைப்பது என்று கூறியவர், "நான் இப்போ வழிபாட்டுக்காகக் கோவிலுக்குப் போகிறேன்." என்று விடை பெற்றார்.
எல்லாவற்றையும் ஒருவாறு ஒழுங்கு செய்துவிட்டு வந்து உட்காரவும் தொலை பேசி அழைப்பு வரவும் சரியாக இருந்ந்தது.
எனது வியட்நாம் நண்பி, "நான் இப்போ அங்கு வருகிறேன்." என்றார். சற்று நேரத்தில் வந்தவர் கையில் பை நிறைய அப்பிள் பழங்கள்.
அன்று எங்களுக்குக் கிடைத்த அப்பிள் பழங்கள் மட்டுமே நாற்பத்தாறு. வீட்டில் இருப்பதோ இரண்டே பேர்.
அன்று நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்.
இது வரும் முன்னே படித்து பதில் இதற்கு முன் உள்ள கார் கேக்--பதிவில் போட்டு விட்டேனே:)
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
//அன்று நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்.//
பதிலளிநீக்குஅந்த நரி பாவம் ஒரு வேளை அன்னைக்கு பட்டினியாக இருந்திருக்குமோ :-) ( ஜோக் நே ஸீரியஸ் )
//தாயகம் செல்லும் போது அவர்களது செல்லப்பிராணிக்கு (பூனைக்குட்டி) உணவு வைக்கும் படியும் சிறிய தோட்டத்திற்கு நீர் ஊற்றி விடும்படியும் கேட்டுக் கொண்டார்கள். //
பதிலளிநீக்குஓஹ்..இதுல பூஸார்தான் நரியா.. அப்ப சரி ஹா..ஹா..
ஹைஷ்126,
பதிலளிநீக்குதிகைத்துப் போனேன். !!
இன்று இமாவின் உலகத்தில் தான் கார்காலம்.
I am New. ;))
Mum,
பதிலளிநீக்குDo you use firefox!!
செபா ஆன்டி! உங்க பாடு ஜாலி தான் போங்க... ஆப்பிளை எல்லாம் அப்படியே வெட்டி கொஞ்சம் அப்பிள் பை செய்து கொடுங்க :))
பதிலளிநீக்குஆசியா,
பதிலளிநீக்குஇந்த மாதிரியான சுவையான நிகழ்வுகள் பல உள்ளன.
மறக்க முடியாதவை.
கருத்துக்கு நன்றி.
ஹைஷ்,
பதிலளிநீக்குஇங்கும் நீங்களே முதல்.
வடை உங்களுக்கே.
நன்றி.
ஜெய்லானி,
பதிலளிநீக்குநரி? இங்கு இருக்கிறதாகத் தெரியவில்லை. ஆனால் hedgehog & ஒரு கரு நிற முயல் அடிக்கடி வருவார்கள்.
என் நன்றிகள்.
இமா you mean நெருப்புநரி?
பதிலளிநீக்குஇலா,
பதிலளிநீக்குஅதற்கென்ன apple pie அனுப்பி வைக்கிறேன்.
;)
பதிலளிநீக்குமிகவும் நன்றி அம்மா! நீங்க நெருப்புநரியில் டைப் பண்ணும் போதே படிச்சு “I am New" என அங்கு பின்னூட்டம் போட்டுவிட்டேன்:)
பதிலளிநீக்குதேங்கூ பார் apple pie என்னிடம் கொடுங்கோ, நான் பத்திரமா ஃப்றீ டெலிவரி இலாவுக்கு கொடுத்து விடுகிறேன்:))))
/எங்களுக்குக் கிடைத்த அப்பிள் பழங்கள் மட்டுமே நாற்பத்தாறு. வீட்டில் இருப்பதோ இரண்டே பேர்./ 46? 4+6=10... 1+0=1 ஆகமொத்தம் கூட்டுத்தொகை 1 தான் க்ராண்ட்மா.ஹிஹி!
பதிலளிநீக்குஜீனோக்கு ஆப்பிள் பிடிக்கும்..பை,சூட்கேஸ் அல்லாம் வாணாம்.ஜீனோ அப்பூடியே கடிச்சி,கடிச்சி சாப்ப்டுடும்.அண்ணேவும் ஜீனோவும் வந்து கலெக்ட் பண்ணிக்கிறம்.மெயின் டோர் ஓபின்-ஆ வையுங்கோஓஓ.
நல்ல அயலவர்கள் உங்களுக்கு.
ஜீனோ ,
பதிலளிநீக்குஓ! ஜீனோ கணக்கில் படு சுட்டி தான்.
ஆப்பிள் எல்லாம் உங்களுக்கே. எடுத்து சுவையுங்கள்.
நன்றி.
ஹாஹ்ஹா.. எனக்கு ஆப்பிள் ஜாம் வேண்டும்..
பதிலளிநீக்குசந்தனா,
பதிலளிநீக்குஆப்பிள் ஜாம். ஆஹா தாராளமாகத் தரலாம்.
வந்து பெற்றுக் கொள்ளுங்கள்.
அன்புள்ள ஹைஷ,
பதிலளிநீக்குஆப்பிள் பை உங்களுக்கும் தருகிறேன்.
இலாவிற்கு இலவசமாக விநியோகிப்பதற்கும் என் நன்றி.
அன்புடன் செபா.
:)
பதிலளிநீக்கு