"சுற்றி சுற்றி சுப்பரின் கொல்லைக்குள்ளே" என்பது போல நானும் திரும்பத் திரும்ப ஒரு சிறிய வட்டத்தினுள்ளே வளைய வந்து கொண்டிருக்கிறேன்.
ஆமாம் இந்த நாட்டில் எனது உலகம் மிகவும் சிறியதே. இந்த தொடர் மாடிக் குடியிருப்பிற்கு வந்ததிலிருந்து சில சம்பவங்கள், இங்கு குடி வருவோரெல்லாம் முதலில் எங்களை வினோதமான பிராணிகளைப் பார்ப்பது போல் பார்த்தாலும் சில நாட்களில் நண்பர்களாகி விடுவார்கள். அதன் பின்னர் சில உதவிகளையும் கேட்பார்கள். முதலாவது கோடை விடுமுறையில் ஒரு மாலைப் பொழுதில் அண்மையில் இருந்த மகன் வீட்டுக்குப் போய் விட்டுத் திரும்பினோம். கதவருகே ஒரு பொலித்தீன் பை வைக்கப்பட்டிருந்தது. உள்ளே பழங்களும் வேறு உணவுப் பொருட்களும் கூடவே ஒரு சிறு காகிதத்தில் சிறு செய்தி ஒன்றும் எழுதப்பட்டிருந்தது. "நாங்கள் இரு வார விடுமுறையில் போகிறோம். தயவு செய்து எங்கள் தபால்களை சேகரித்து வையுங்கள் எங்கள் 'rubbish bin' ஐயும் collection அன்று வெளியே வைத்து விடுங்கள்."
இது போன்று இங்குள்ளவர்கள் வெளியே செல்லும் சமயங்களில் எல்லாம் சிறு சிறு உதவி கேட்பார்கள். பதிலுக்குத் தாங்கள் என்ன கொண்டு வர வேண்டும் என்றும் கேட்பார்கள்.
எதுவும் வேண்டாம் என்றாலும் நன்றிக்கடனாக ஏதாவது இனிப்புகள்
வந்து சேரும். அவற்றை எங்கள் பக்கத்து வீட்டுச் செல்லப் பெண்கள் சுவைப்பார்கள்.
ஒருவர் தனது திறப்பை எங்களிடம் தந்து இது உங்களிடம் இருக்கட்டும். எப்போதாவது என்னிடம் உள்ளது தவறிப் போனால் உதவியாக இருக்கும் என்றார்.
இன்னுமொருவர் வெளியே செல்கையில் மடிக்கணணியைத் தந்து விட்டுப்போவார்.
ஒருவர் தனது திறப்பை எங்களிடம் தந்து இது உங்களிடம் இருக்கட்டும். எப்போதாவது என்னிடம் உள்ளது தவறிப் போனால் உதவியாக இருக்கும் என்றார்.
இன்னுமொருவர் வெளியே செல்கையில் மடிக்கணணியைத் தந்து விட்டுப்போவார்.
எங்கள் யூனிட்டுக்கு மேலுள்ள யூனிட்டில் தாயும் மகளுமாக இரு சீனப் பெண்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வெளியே போகும் போதெல்லாம் balcony பக்கமுள்ள கதவைத் திறந்து வைத்து விட்டுப் போவார்கள். ஒரு நாள் அவர்கள் வந்து, "நாங்கள் திறப்பை உள்ளே வைத்துப் பூட்டி விட்டோம். ஏணி ஒன்று தர முடியுமா?" எனக் கேட்டார்கள். எங்களிடம் ஏணி இல்லை. "வேண்டுமானால் உயரமான stool ஒன்று தருகிறோம்." என்று சொல்லிக் கொடுத்தோம். உயரம் போதாததால் ஒரு கதிரையின் மேல் அதனை பின் விறாந்தையில் வைத்துவிட இளம் பெண் அதைப் பிடித்து நிற்கத் தாய் நீர் வடியும் குழாய் வழியே ஏறி மேலே போக முயன்றார். பல முறை முயன்றும் முடியாது போகவே இருவரும் சீன மொழியில் ஏதோ பேசிக் கொண்டார்கள். சத்தங் கேட்டு வெளியே வந்த பக்கத்து யூனிட் பையன் மேலே ஏறித் திறப்பை எடுத்துக் கதவையும் திறந்து விட்டார்.
இதற்கு முன்னர் இருந்தவர்களுக்கும் இதே போல ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்ட போது அவர்களில் ஒருவர் சமையல் அறையின் யன்னல் அருகே stool ஐ வைத்து ஏறி யன்னலின் கண்ணாடிகளைக் கழற்றி விட்டு உள்ளே குதித்து எடுத்தார். பலனாக காலில் பலமான அடியும் பட்டார்.
ஒன்பதாவது யூனிட் நண்பருக்கும் இதே போல் ஒரு முறை நடந்தது.
இவர், மற்றுமொரு நாள் அவசரமாக வந்து தனது செல்பேசி எண்ணைத் தந்து தனது அறைக்குப் போன பின் அழைத்தால் தவறுதலாக வைத்த போனைக் கண்டு பிடிக்கலாம் என்று சொல்லித் தன் அறைக்குத் திரும்பினார். எண்ணை டயல் பண்ணியதும் மணி ஒலித்தது. அவர் திரும்பி வந்து போன் கிடைக்கவில்லை என்றார். "உங்கள் காருக்கு அண்மையில் போய்
இதன் முன்னரும் ஒரு மொபைல் போனை உடுப்புகளுடன் கழுவும் இயந்திரத்துள் போட்டு அதனைச் சித்திரவதை செய்த அனுபவமும் இவருக்கு உண்டு. அத்தோடு இவரும் ஒரு முறை திறப்பை உள்ளே வைத்து ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த அனுபவம் பெற்றவர்.
இப்படி எங்களுக்கு ஏற்படும் அனுபவங்களை எல்லாம் எழுதினால் பதிவு நீண்டு விடும். எனவே விடை பெறுகிறேன்.
படத்தில் இருப்பது மாடிப் படிக்கட்டில் இருக்கும் அலங்காரம்.
செபா ஆன்டி! உங்க பக்கத்து வீட்டு ஆக்கள் எல்லாம் ரொம்ப இன்ட்ரஸ்டிங் பேர்வழிகள் போல...
பதிலளிநீக்கு//உடுப்புகளுடன் கழுவும் இயந்திரத்துள் போட்டு அதனைச் சித்திரவதை செய்த அனுபவம்
கிக்..கிக்..கிக்...
நல்ல நல்ல அனுபவங்கள்.
பதிலளிநீக்குபி.கு:
ஜெபா ஆன்ரி, எங்கட குயினை நீங்க வைத்திருக்கிறீங்க. இனி மாடிப்படியேறும் போதெல்லாம் அதிராவை நினையுங்கோ:))).
//ஒரு மொபைல் போனை உடுப்புகளுடன் கழுவும் இயந்திரத்துள் போட்டு அதனைச் சித்திரவதை செய்த அனுபவமும் இவருக்கு உண்டு. அத்தோடு இவரும் ஒரு முறை திறப்பை உள்ளே வைத்து ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த அனுபவம் பெற்றவர்.// அம்மா நல்ல அனுபவசாலிகள் நிறைந்த அடுக்கு மாடி கட்டிடம் :)
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
ஒவ்வொன்னும் அருமையான அனுபவங்கள்...சிரிக்கவும் வைக்குது சிலது சிந்திக்கவும் வைக்குது..!!
பதிலளிநீக்குஇலா,
பதிலளிநீக்குஇப்படியான நண்பர்களால் தான் எனது பொழுது இனிமையாகப் போகிறது. பிஜி போய் வரும்போதும் மறக்காமல் பழைய முத்திரைகள் கொண்டு வருவார். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பது இவரது விசேட சுபாவம்.
மிக்க நன்றி.
அதிரா,
பதிலளிநீக்குஓகோ! அவர் உங்களுக்கு மட்டும்தான் குயினோ? இப்போ தான் அறிந்து கொண்டேன். அதிராவை மறப்பதா? எப்படி முடியும்? நன்றிகள்.
ஹைஷ்,
பதிலளிநீக்குஒன்பதாம் யூனிட் நண்பரால் நாங்கள் பெற்ற அனுபவங்கள் பல.
காரில் walk போக அழைத்ததும் அதில் அடங்கும். மீண்டும் வருக.
நன்றிகள்.
ஜெய்லானி,
பதிலளிநீக்குவருகைக்கும் பதிவிற்கும் மிக்க நன்றி.
மீண்டும் வாருங்கள். நன்றி.
க்ராண்ட்மா,ஹவ் ஆர் யூ? ஜீனோ & புஜ்ஜி ஆர் டூயிங் குட்.அடிக்கடி வந்து கருத்து போட டைம் கிடைக்கலை,தவறா எண்ணாதைங்கோ!
பதிலளிநீக்குஉங்கள ஜீனோ ஒரு தொடர்பதிவுக்கு கூப்டுது.வாங்கோ,ப்ளீஸ்!!:):)
http://genos-corner.blogspot.com/2010/08/blog-post_06.html
நல்ல நகைச்சுவையான ஆட்கள் போல இருக்கு. நல்ல பதிவு, செபா ஆன்டி.
பதிலளிநீக்குசெபா.. ரொம்ப நாட்களாச்சு உங்களோட கதைத்து.. இதுவும், இதற்கு முந்தைய பதிவுகளும் கொஞ்சம் படித்தேன்.. நன்றாக எழுதியிருக்கீங்க.. சுவாரசியமான அனுபவங்கள்.. பகிர்வுக்கு நன்றி..
பதிலளிநீக்குஅய்யஹோ!!
பதிலளிநீக்குபப்பி க்ராண்ட்மாவை (செல்லமாத்தான் ஆனால்) கடிச்சுப் போட்டுதூஊஉ... டொக்டர்மார் யாராவது இருந்தால் ஊசியோட வாங்கோ... ;))))
ஜீனோ
பதிலளிநீக்குகிராண்ட்மா இப்பதான் உங்கள் பதிவுகளை வாசிக்கத் தொடங்கி இருக்கிறா. விரைவில் பதிவு போடுவா.
என்னை உங்கள் தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு நன்றி.
வானதி,
பதிலளிநீக்குஇந்தத் தொடர்மாடிக்கு வந்த போது இங்குள்ளவர்கள் எப்படியானவர்களோ என்று மிகக்
கவலைப்பட்டேன். ஆனால் எல்லோருமே நல்லவர்கள்தான் என்று அறிந்ததும் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நாட்கள் இனிமையாகக் கழிகின்றன.
வருகைக்கு நன்றி.
சந்தனா,
பதிலளிநீக்குநீண்ட நாட்களின் பின்..
பல வேலைகளின் நடுவிலும் இடை இடையே வந்து பதிவு போடுவதற்கு என் மனமார்ந்த நன்றிகள்.