சனி, 23 ஜனவரி, 2010

எங்கள் அப்பார்ட்மென்ட் -1இன்று நான் சமைத்துக் கொண்டிருந்த போது கதவு தட்டப்பட்டது. திறந்த எனக்கு ஆச்சரியம். எங்கள் பக்கத்து யூனிட்டில் வசித்து ஒன்றரை வருடங்களுக்கு முன் வீடு மாறிச் சென்ற நண்பியைக் கண்டதும் ஒரே மகிழ்ச்சி. இங்கு வசிக்கும் போதே விடுமுறைக்குச் செல்லும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வார். சிம்பாப்வே நாட்டவராக இருந்தும் இன்று வரை எங்களை நினைவில் வைத்திருப்பது பெரிய விடயம் தான். உடனே எனக்கு எங்கள் அப்பார்ட்மென்ட் பற்றி எழுதும் எண்ணம் தோன்றியது.

இங்கு நாங்கள் ஐந்து ஆண்டுகளாக வசிக்கிறோம். பன்னிரண்டு யூனிட்டுகள் உண்டு. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். ஆறு நாட்களில் வீடு விட்டுப் போனவர்களும் மிகச்சில மாதங்களில் விட்டுபோனவர்களும் அநேகர்.

4 கருத்துகள்:

  1. ஷார்ட் & ஸ்வீட்-ஆக எழுதரீங்கள் கிராண்ட்மா!! தொடர்க உமது எழுத்துப்பயணம்!:):D:)

    பதிலளிநீக்கு
  2. ஜீனோ, எப்போதுமே சுருக்கமாக எழுதுவதுதான் எனது பழக்கம். உங்களுக்காக விரிவாக எழுத முயற்சிக்கிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  3. நன்றி. மேலும் தொடரவே விரும்புகிறேன்.

    பதிலளிநீக்கு