புதன், 27 ஜனவரி, 2010

பக்கத்து யூனிற் குட்டிப் பெண்கள்.

அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். மூன்றரை, இரண்டரை வயதினர். அவர்களது பெற்றோர் நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த யூனிட்டை வாங்கி இதில் குடி வந்தனர். இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்கள். வந்த நான்கு மாதங்களில் முதற்குழந்தை பிறந்தாள். அடுத்த வருடத்திலே இரண்டாவது பெண் பிறந்தாள். இருவருமே படு சுட்டிகள். முதலில் அவர்கள் பழகத் தொடங்கியது எங்களோடு தான். முதலில் 'aunty, uncle' என்று அழைத்தவர்கள் இப்போ 'gandma, grandpa' என்று அழைக்கிறார்கள். ஏதும் காரியம் ஆக வேண்டுமானால் 'grandmaji please ' என்று ஐஸ் வைக்கத் தொடங்கி விடுவார்கள். என்னால் ஆகவில்லை என்றால் க்ராண்ட்பாவிடம் போய் விடுவார்கள்.

இவர்களது வால் தனங்கள் எண்ணிலடங்காது. சுனாமி போல் திடீரென நுழைந்து வீட்டை அதகளப்படுத்தி விடுவார்கள். பார்க் போகும் போது வழியில் கதவைத் தட்டி 'We'll see you both in the park' என்று கூறிவிட்டு ஓடி விடுவார்கள்.

உலகிலேயே அருமையான பிள்ளைகளாக மிக அன்பாக விளையாடிக்கொண்டு இருப்பார்கள். நடுவில் சண்டை வந்து விடும். அடித்துப் பிடித்து, முடியை இழுத்து சமயங்களில் ஒருவரையொருவர் கடித்தும் சண்டை தொடரும். 'இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சண்டை நடக்கிறது' என்று சொல்லி அவர்களின் தாய் பிணக்கைத் தீர்க்கப் பெரும் பாடு படுவார். இவர்களைப்பற்றி இன்னும் வரும்

6 கருத்துகள்:

  1. செபா ஆன்டி!!! எனக்கும் இப்படியான இரண்டு குழந்தைகள் தெரியும்... மாதவ் ‍ அண்ணா/ தேஜு தங்கை... தங்கையிடம் அடி வாங்கும் அப்பாவி அண்ணன் அவனாகத்தான் இருக்கும் :))
    ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு....

    பதிலளிநீக்கு
  2. இங்கும் அதே கதை தான். பெரியவள் ஆரம்பிப்பாள். பெரியவள் ஒரு அடி கொடுத்தால் பதிலுக்குச்சின்னவள் இரண்டு மூன்று அடிகள், உதை, கடி, பிறாண்டுதல் எல்லாம் நடக்கும். அடுத்த நிமிடம் 'சொறி தீதி' {அக்கா ] என்று கட்டியணைக்க பழையன மறந்து விளையாட்டுத்தொடங்கும். இது தான் குழந்தைகளின் சுபாவம்.

    பதிலளிநீக்கு
  3. பெரியவர் ஆனா இப்படியான மன்னிக்கும் மனசு ரொம்ப சின்னதாகிடும் ஆன்டி!!! டூ பேட் தெரியுமா..

    பதிலளிநீக்கு
  4. தொடருங்க ஜெபா ஆன்ரி... குட்டிப்பெண்களின் சண்டையைப் பார்த்தால் என்னையும்... .... யும் போல எல்லோ இருக்கு:).

    பெரியவர் ஆனா இப்படியான மன்னிக்கும் மனசு ரொம்ப சின்னதாகிடும் ஆன்டி!!! டூ பேட் தெரியுமா../// ஆரைப்பற்றிப் புலம்முறீங்க இலா..?:).

    பதிலளிநீக்கு
  5. சில சந்தர்ப்பங்களில் இலா கூறுவது போன்ற மாற்றம் ஏற்படுவதுமுண்டு.

    பதிலளிநீக்கு
  6. அதிரா
    ''குட்டிப்பெண்களின் சண்டையைப் பார்த்தால் என்னையும்........யும் போல.''
    யார் அந்த ......யும் ? அறியலாமா?

    பதிலளிநீக்கு