வெள்ளி, 30 ஏப்ரல், 2010

எதிர்பாராத முத்தம்

முதல் வகுப்பு மாணவர்கள் என்னிடம் படித்தபோது கிடைத்தது இது.
அவ்வருடம் வகுப்பில் நாற்பத்தேழு குழந்தைகள் இருந்தார்கள். அப்போதெல்லாம் காலை எட்டு மணிக்குப் பாடங்கள் தொடங்கிப் பத்துமணி வரை நடக்கும். பின் பதினைந்து நிமிட இடைவேளை. பிள்ளைகள் சற்றுநேரம் வெளியே போய்த் தாங்கள் கொண்டு வந்திருக்கும் சிற்றுண்டிகளை உண்டு முடித்து, குளிர் பானங்களை அருந்திவிட்டு வருவார்கள். தொடர்ந்து பாடங்கள் நடைபெற்று, பன்னிரண்டு மணியுடன் வகுப்புகள் முடிவுறும்.
ஒரு மாணவன் இடைவேளையின் பின்னர் வகுப்பில் இல்லாததை அவதானித்தேன். மறு நாள் அவனிடம் விசாரித்த போது அப்பா அழைத்துப் போனதாகச் சொன்னான். 'இனிமேல் இப்படிச்செய்யாதே' என்று சொல்லி விட்டுவிட்டேன்.
அன்றும் அவன் இடைவேளையின் பின்னர் மாயமாகி விட்டான்.
மறு நாள் ஆளைத் தப்ப விடக் கூடாது என்று இடைவேளை விடுவதற்கு முன்னதாகவே கதவுக்குக் கிட்ட நாற்காலியைப்போட்டு உட்கார்ந்து அப்பியாசக் கொப்பிகளைத் திருத்த ஆரம்பித்தேன்.
எதிர்பாராத வேளை திடீரென ஒருவர் என்னை அணைத்து இரு கன்னங்களிலும் முத்தமிட திடுக்கிட்டு நிமிர்ந்தேன்.
'டீச்சர், போய்விட்டு வருகிறேன்' என்று சொல்லிவிட்டுத் தடுக்கு முன் பதிலுக்குக் காத்திராமல் ஓடி விட்டார் அவர்.
மறு நாள் அவரது தந்தையை அழைத்து, பாடசாலை விட்டதும் தான் அழைத்துப் போகலாம் என்று சொல்லி விட்டேன். அதன் பின்னர் ஒழுங்காக வகுப்பிலிருந்தார்.
நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.

12 கருத்துகள்:

 1. //நான் ஒய்வு பெற்ற பின்னர் ஒருதடவை தெருவில் இந்த மாணவனைச் சந்தித்தேன். வணக்கம் தெரிவித்து நலம் விசாரித்து சென்றார்.//

  நாங்க எப்பவுமே டீச்சருக்கு மரியாதை குடுப்போம். அம்மா அப்பாவுக்கு பிறகு அவங்கதானே . நம்முடைய உயர்வுக்கு காரணம். நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு
 2. //நாங்க எப்பவுமே டீச்சருக்கு மரியாதை குடுப்போம்.//
  ஓ!! நீங்கதானா அது!!

  பதிலளிநீக்கு
 3. 'அத்தான்', 'எதிர்பாராத முத்தம்' எண்டு நல்ல நல்ல தலைப்பாப் போடுறீங்க மம்மி. ;D

  பதிலளிநீக்கு
 4. தலைப்பும் அதைச் சொன்ன விதமும் அருமை....

  பதிலளிநீக்கு
 5. செபா ஆன்டி, நல்லா இருக்கு. அப்படியே இமா செய்த குழப்படிகளையும் எழுதுங்கோ.

  பதிலளிநீக்கு
 6. என்ன எல்லாருக்கும் ஆவலாதிக் குணமாக இருக்கு!! கர்ர்.

  இமா குழப்படி செய்து இருந்தால்தானே எழுதுறதுக்கு. நான் எப்பவும் நல்ல பிள்ளை. அமைதியா எந்த மூலையிலாவது ஒரு புத்தகத்தோட (ராணி முத்து, தினமணிகதிர், கலைமகள்) இருப்பன். ;)

  பதிலளிநீக்கு
 7. நன்றி ஜெய்லானி. என்னைப் படிப்பித்த ஆசிரியர்கள் எல்லோரையும் இன்றும் நினைவில் வைத்துள்ளேன். முக்கியமாக முதலாம் வகுப்பில் படிப்பித்தவர், பின்னர் அதிபராகி சிரேஷ்ட தராதர வகுப்பிலும் படிப்பித்தார். அவரின் கீழ் பயிற்றப்படாது (இரண்டு ஆண்டுகள்) பயிற்றப்பட்டு (மூன்று ஆண்டுகள்) கடமையாற்றிய அனுபவங்களும் மறக்க முடியாதவையே. நான் மாற்றலாகி வேறு இடம் வந்த பின்னரும் அவர்களுன் தொடர்பு கொள்வேன். தலைமை ஆசிரியை என் வீட்டுக்கு வந்து தங்கியும் போயிருக்கிறார். என் மாணவர்களும் பலர் இன்றும் என்னுடன் தொடர்பு கொள்கிறார்கள். இது எனக்குப் பெரிய மகிழ்ச்சியே.

  பதிலளிநீக்கு
 8. sangkavi,
  உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி.

  -------------------
  வானதி,
  வருகைக்கு நன்றி. இமா என்றுமே குழப்படி செய்ததில்லை. ஆனாலும் அவவைப்பற்றியும் எழுதுவேன்.

  பதிலளிநீக்கு
 9. //ஆனாலும் அவவைப்பற்றியும் எழுதுவேன்.//
  Grrrrrrrrrr.

  ;)

  பதிலளிநீக்கு
 10. ஜெபா ஆண்ட்ரி, நல்ல ஐடியாவை நல்ல நேரத்தில தந்திருக்கிறீங்கள்.... இனிமேல் நாங்களும் ஏதும் வெளி அலுவல்களுக்கு(லேடீஸ் பார்ட்டி).... இதே முறையில் ...கிரேட் எஸ்கேப் ஆகலாம்..

  இமா சொன்னது…
  //ஆனாலும் அவவைப்பற்றியும் எழுதுவேன்.//
  Grrrrrrrrrr.////
  அடாது கர்ர்ர்ர்ர் சொன்னாலும் விடாது எழுதிடுவா ஜெபா ஆண்ட்ரி....
  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  பதிலளிநீக்கு
 11. ம். பார்ப்போம், பார்ப்போம். ;)

  பதிலளிநீக்கு
 12. அதிரா,

  குழந்தைகள் புத்திசாலிகள். ஏதாவது யுக்தியைக் கையாண்டு நினைத்ததைச் சாதித்து விடுவார்கள். நீங்களும் முயன்று பாருங்கள். பதிலுக்கு ஏதாவது கிடைக்கிறதா பார்ப்போம்.

  நன்றி.

  பதிலளிநீக்கு