வெள்ளி, 16 ஜூலை, 2010

தேன் வியாபாரம்


அன்று பேச்சுப் பாட வேளையில், ஒவ்வொரு மாணவரிடமும் அவரவர் குடும்ப உறுப்பினர் எத்தனை பேர், தந்தை என்ன தொழில் செய்கிறார் மற்றும் சகோதரர்கள் பற்றிய விபரங்களைக் கூறும்படி கேட்டேன்.

அப்படியே ஒவ்வொருவரும் சொல்லிக் கொண்டு வந்தார்கள்.

ஒரு மாணவர் தனது தந்தை முன்பு கடற்கரையில் கடலை வியாபாரம் செய்து வந்ததாகவும் வருமானம் போதாததால் தேன் வியாபாரம் செய்கிறார் என்பதாகவும் சொன்னார்.

'வியாபாரம் செய்வற்கான தேனை எப்படிப் பெறுகிறார்?' என்று கேட்டேன்.
சற்றும் தாமதிக்காமல் 'வீட்டிலேயே செய்வார்,' என்றார்.

'எப்படி செய்வார்?' என்று கேட்டேன்.
'சர்க்கரையை நன்றாகக் காய்ச்சி ஆறவிடுவார். பிறகு போத்தல்களில் ஊற்றி அதன் மேலாக சிறிது தேனை விட்டுப் போத்தலை மூடி விடுவார்,' என்று சொன்னார்.

வருமானம் இல்லாமையே சிலரை இப்படியெல்லாம் செய்யத் தூண்டுகிறது.

ஆனாலும், குழந்தைகள் ஒரு போதும் பொய் பேச மாட்டார்கள்.

12 கருத்துகள்:

  1. ஐ எல்லா தேனும் எனக்குத்தான் :)

    பதிலளிநீக்கு
  2. ஆஆஆஆ அம்மா எனக்கு இந்த தேன் வேண்டாம். இயற்கை தேன்தான் வேண்டும் :)

    வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  3. ம். இதுக்குத்தான்.. இதுக்குத்தான் சொல்றது, போஸ்டிங் படிக்காம ஐ, யூ எல்லாம் கத்தப் படாது என்று. ;)

    பதிலளிநீக்கு
  4. ஹைஷ்126 சொன்னது…
    ஆஆஆஆ அம்மா எனக்கு இந்த தேன் வேண்டாம். இயற்கை தேன்தான் வேண்டும் :)
    // ஹா...ஹா...ஹா... இப்பூடிச் சொல்லி ஆரிட்டத்தப்பினாலும் பூஸிடம் தப்பவே முடியாது:))), முழுத்தேஏஏஏஏஏஏஏஏஏனும் உங்களுக்கேதேன்:)).

    ஹைஷ்126 சொன்னது…
    உண்மைதான் :))))/// எதைச் சொல்றீக?:)))

    பதிலளிநீக்கு
  5. இமா சொன்னது…
    இமா சொன்னதை. ;))
    /// இமா சொன்னால் சரியாத்தான் இருக்கும்..

    ஜெபா ஆன்ரி இண்டைக்கு அடிக்கப்போறா எனக்கு:).

    பதிலளிநீக்கு
  6. என்னா இது என்னைய வைச்சு காமெடி பண்றீங்களோ??? :)))

    பதிலளிநீக்கு
  7. //ஆனாலும், குழந்தைகள் ஒரு போதும் பொய் பேச மாட்டார்கள். //

    இந்த குழந்தை இன்னும் எத்தனை பேரிடம் சொல்லி இருக்கோ..!!

    ஆனா கடையில இருக்கும் தேனில் 95 சதவீதம் உண்மையானது இல்லை...

    பதிலளிநீக்கு
  8. ஹைஷ், இமா, அதிரா,

    உங்கள் மூவரது வருகைக்கும் பதிவுகளுக்கும் எனது நன்றிகள்.
    அடிக்கடி வாருங்கள். உங்கள் கருத்துக்கள் எனக்கு உற்சாக பானம் போல இருக்கின்றன.
    நன்றி.

    பதிலளிநீக்கு
  9. ஜெய்லானி,
    கபடமில்லாத சிறுவன். யாரிடமெல்லாம் இதனைச் சொல்லித் தந்தையிடம் அடி வாங்கினானோ.
    நன்றி.

    பதிலளிநீக்கு