சனி, 14 ஆகஸ்ட், 2010

I'm New

நேற்று சின்னப் பெண்கள் இருவரும் சுனாமி போல் வேகமாகப் பெரும் ஒலியுடன் எங்கள் வீட்டிற்குள் நுழைந்து விட்டார்கள்.

எதைக் கொட்டிக் குழப்பப் போகிறார்களோ என்று  நினைப்பதற்குள் மேசையில் இருந்த பொருட்கள்  நிலத்தில் சிதறி விட்டன. பலவிதமாக  சமாளிப்பதற்கு முயற்சித்தும் பலனில்லை. அவர்களின்  தாய்  வந்து "வாருங்கள், சிறுவர் பூங்கா போகலாம்,"  "party க்குப் போகலாம்" என்று என்னென்னவோ சொல்லிப்பார்த்தார். அவர்கள் நம்புவதாயில்லை.

நான் தொலைபேசியில் அவர்களின் தந்தையுடன் பேசுவது
போல்  "ஒ! நீங்கள் பார்க் போகிறீர்களா? சரி, நீங்கள் தனியே  போய் வாருங்கள்.  பிள்ளைகள் இங்கேயே நிற்கட்டும்," என்றேன்.

உடனே அனன்யா வீட்டிற்கு  ஓடினாள். ஓடிய வேகத்திலேயே திரும்பி விட்டாள். தன்னைத் தூக்கி மேசை மேல் இருக்க விடும் படி கேட்டாள். என் கணவர் அவளைத்  தூக்கி விட்டதும் பெரியவள் என்னிடம் தன்னையும் தூக்கி விடும் படி கேட்டாள்.
  நான், "என்னால் முடியாது. I'm old. I can't."  என்றேன். உடனே "But I'm new." என்ற பதில் வந்தது. தாய் சிரித்து விட்டு ஏதேதோ சொல்லி அழைத்தும் போக மறுத்து "Want a lolly, want a lolly" என்று பாட ஆரம்பித்தார்கள்.

வேறு வழியின்றி அதைக் கொடுக்கவும், தொடர்ந்து "Want a biscuit." என்று  பாடினார்கள். "வேறு என்ன தொடரப் போகிறதோ! இந்தப்
பாடல்  இலகுவில் முடியாது." என்று தாய் "வாருங்கள், கடைக்குப் போய் உடைகள், சப்பாத்துக்கள், toys எல்லாம்  வாங்கலாம்." என்று  சொல்லி அழைத்துப் போனார்.

இக்காலத்தில் குழந்தைகளைச் சமாளிக்கத் தனித்திறமை வேண்டும்

11 கருத்துகள்:

 1. //நான், "என்னால் முடியாது. I'm old. I can't." என்றேன். உடனே "But I'm new." என்ற பதில் வந்தது.//

  இதுதான் ஜெனரேஷன் கேப்:)))

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 2. //அன்று எங்களுக்குக் கிடைத்த அப்பிள் பழங்கள் மட்டுமே நாற்பத்தாறு. வீட்டில் இருப்பதோ இரண்டே பேர்.

  அன்று நான் நரி முகத்தில் தான் விழித்திருக்க வேண்டும்.//

  அம்மா நரி அதே தெருவில் இருக்கா? அல்லது சில தெருக்கள் தள்ளி இருக்கா??

  ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
  எங்கே இந்த இடுக்கையை காணவில்லை?

  :)

  பதிலளிநீக்கு
 3. //இக்காலத்தில் குழந்தைகளைச் சமாளிக்கத் தனித்திறமை வேண்டும்//

  உண்மைதான் .ஸ்பெஷல் கோச்சிங் வேனும் போல இருக்கு. :-))

  பதிலளிநீக்கு
 4. I am 'New' too. ;)
  //இதுதான் ஜெனரேஷன் கேப்.// m. ;)

  பதிலளிநீக்கு
 5. ஹைஷ்,
  இந்தக் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவு அதிகம் தான்.
  அவர்களது வினாக்களுக்கு விடை கூறுவது
  கடினமே.

  பதிலளிநீக்கு
 6. ஹைஷ்
  அம்மா நரி அதே தெருவில் இருக்கா? அல்லது சில தெருக்கள் தள்ளி இருக்கா??
  zoo வில் கூட இருக்குமோ அறியேன்.
  வடை ஹைஷுக்குத் தான்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 7. ஜெய்லானி
  புதிய உத்திகளைக் கையாண்டால் தான்
  இவர்களை சமாளிக்க முடியும் .
  நன்றிகள் பல

  பதிலளிநீக்கு
 8. இமா,
  நீங்கள் new தான்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 9. செபா, சுவாரஸ்யமாக இருக்கு. குட்டிகளை சமாளிப்பதே ஒரு கலை தான்.

  பதிலளிநீக்கு
 10. வானதி,
  இந்தக் குழந்தைகளின் கதைகளைக் கேட்டாலே
  கவலையெல்லாம் பறந்து போகும்.
  உங்களுக்கு என் நன்றிகள்.

  பதிலளிநீக்கு