புதன், 18 ஆகஸ்ட், 2010

ஜீனோவின் அழைப்பிற்கு இணங்க - செபா

1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
செபா.
  
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
அல்ல. எனது பெற்றோர் இருவரதும் பெயர்கள் இந்த ஆரம்பத்தைக் கொண்டுள்ளதால் அதனை என்  பெயராக்கினேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
உண்மையில் இது பற்றி முதலில் நான் எதுவும் அறிந்திருக்கவில்லை. 'இது இமாவின் உலகம்' வலைப்பதிவைப் பார்த்ததும் எனக்கு இப்படி ஒன்று ஆரம்பிக்கலாமென்று தோன்றியது. அதற்கான உதவியும் இமாவிடமிருந்து கிடைத்தது. இதுவே என் வலைப்பதிவு ஆரம்பமான கதை.

4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவும் செய்ததில்லை. அறுசுவையில் அறிமுகமானவர்கள் அன்போடு வருகிறார்கள். பாசமாகப் பேசுகிறார்கள்.

5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
நான் அனுபவித்து ரசித்த விடயங்கள் தான் எல்லாமே. விளைவு என்று சொல்வது என்றால் படிப்பவர்கள் சொல்லும் கருத்துகள், அது தரும் சந்தோஷம் இவை. 

6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
ஆம், பொழுது போக்கென்றே கொள்ளலாம்.
 
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?  
ஒரே பதிவு மட்டுமே உள்ளது. வேறு பதிவு எழுத முயலவில்லை. இதை இன்னும் நன்றாகச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்.
 
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
பொறாமை ஏற்படவில்லை மற்றவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டது உண்டு. நான் எப்போதுமே மற்றவர் மீது பொறாமைப் படுவதில்லை.

9. உங்கள் பதிவைப் பற்றி முதன் முதலில் உங்களைத் தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
முதலில் பாராட்டியது என் மகள் இமா தான். அதுதான் மேலும் பதிவுகள் போடத் தூண்டியது.  
ஹைஷ், ஜீனோ, வானதி, அதிரா, இலா, ஸாதிகா, செல்வி, ஆசியா, சந்தனா, ஜெய்லானி, இன்னும் சிலர் என் வலைப்பூவுக்கு வந்து என்னை உற்சாகப் படுத்துகிறார்கள். விருது கொடுத்து ஊக்கப்படுத்தினார்கள். அவர்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

 10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
நான் செபா.  
பிறந்த ஊர் மட்டக்களப்பு.  
வசித்தது: திருகோணமலை
படிப்பித்தது: மட்/கோட்டைமுனை ரோ. க. தமிழ் பெண்கள் பாடசாலை.  
தி/புனித மரியாள் கல்லூரி.  
தி/புனித சூசையப்பர் கல்லூரி 
கணவர் இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர். பிள்ளைகள் இருவர். ஒருவர் இமா, மற்றவர் மகன். இரு பேரப் பையன்கள், ஒரு பேர்த்தி. தற்போது எல்லோரும் வசிப்பது நியுசிலாந்தில்.  
நண்பர்கள் பலர். மட்டக்களப்பு நண்பர் அத்தனை பேரின் தொடர்பும் விட்டுப் போயிற்று. இப்போது திருகோணமலை நண்பர்கள், என் மாணவர்கள்  சிலர் & அவர்கள்  குடும்பத்தாரின்  நட்புகளே தொடர்கின்றன.
இப்போது இவ்வலைப் பதிவின் மூலமாகவும் நண்பர்கள் சிலர் கிடைத்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது.  
பிடித்தவை & பொழுது போக்குகள்:- வாசிப்பது, இயற்கை அழகை ரசிப்பது, குழந்தைகளின் குறும்புகள், நல்ல பாடல்களைக் கேட்பது, நண்பர்களுடன் பேசுவது, கணினியில் தமிழ் இலக்கிய நூல்கள் வாசிப்பது, தோட்டம் செய்வது, கைவினைப் பொருட்கள் செய்வது. அறுசுவை இணையத்தளத்தில் கைவினைக் குறிப்புகள் சிலது வெளியாயிற்று. கடைசி இரண்டும் இப்போது முடிவதில்லை.  ஆனாலும் பார்த்து ரசிப்பேன். 
பிடிக்காதவை:- மற்றவர்களைப்  பற்றிப் பேசுவது, பொறாமைப் படுவது, காண்பவை எல்லாவற்றிலும் ஆசைப்படுவது.


ஜீனோவின் அழைப்பிற்கு  இணங்க இந்தத் தொடர் பதிவினை எழுதியுள்ளேன். எல்லோரையும் போல வேகமாக என்னால் செயற்பட முடியவில்லை. தாமதமாகவேனும் எழுத முடிந்ததே என்று மகிழ்ச்சியடைகிறேன். தாமதத்திற்கு மன்னிக்கவும். அழைப்புக்கு நன்றி ஜீனோ.

அனைவருக்கும் என் நன்றிகள்.

இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்.

அன்புடன் செபா. 

26 கருத்துகள்:

 1. அருமை செபா அம்மா.நல்ல விளக்கமாக பதில்கள் யதார்த்தம்.என்னுடன் திருக்கோணமலையில் இருந்து வந்து படித்த கல்லூரி தோழி கோணேஸ்வரியின் நினைவு ஏனோ வந்துவிட்டது.இலங்கை மக்கள் மிக அன்புடன் பழ்கும் தன்மை படைத்தவர்கள்.எங்களுக்கு ஒரு குடும்ப நண்பர் உண்டு,ஹிதாயநானா என்று.எங்கள் குடும்பத்தார் கொழும்பில் அந்தக்காலத்தில் வியாபாரம் செய்ததால் கொழும்பு பழக்க வழக்கம் நிறைய உண்டு.தங்கள் நாட்டவர்களை தேடி பழகுவதற்கு அந்த பற்றே காரணம்.

  பதிலளிநீக்கு
 2. தெளிவான அழகான விளக்கம் . இன்னும் எழுதுங்கள்..

  :-)

  பதிலளிநீக்கு
 3. பப்பி கடிச்ச கடி... பரவாயில்ல. ;))

  பதிலளிநீக்கு
 4. ஜெபா ஆன்ரி, ஜீனோ கேட்டமைக்கிணங்க , ஜீனோமாதிரி இல்லாமல், உண்மையான பதில்களை அழகாகக் கூறியிருக்கிறீங்க. அப்போ இமா படித்தது மட்டக்களப்பிலோ? சும்மாதான் கேட்கிறேன், விரும்பினால் சொல்லவும்.

  //இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்/// சூப்பர் மாட்டி:)), இதன் பின்னே பெரிய கதையே இருக்கு:))).

  ...............................................


  ஜெய்லானி சொன்னது…
  தெளிவான அழகான விளக்கம் . இன்னும் எழுதுங்கள்..

  :-)
  //// இன்னும் எழுதுறதோ ஜெய்?:)) எதை இனி எழுதச் சொல்றீங்க ஜெபா ஆன்ரியை..?:)))).

  பதிலளிநீக்கு
 5. இமா சொன்னது…
  பப்பி கடிச்ச கடி... பரவாயில்ல. ;))
  //// ஆ... பப்பிக்கு இப்போ பல்லும் வச்சிட்டுதோ? எதில இமா கடிச்சவர்?:))).

  பதிலளிநீக்கு
 6. செபா ஆன்டி, நல்ல தெளிவான ( பூஸார் போல மழுப்பாமல் ) பதில்கள்.

  இமா( மகள் ) பூஸாரிடம் கடி வாங்கி எழுதினார்.
  செபா ஆன்டி ( அம்மா ) பப்பியிடம் கடி வாங்கி எழுதி விட்டார்.

  உங்கள் தொடர்பதிவு அழைப்பு நல்ல தேர்வு.
  அவர் ப்ளேனிலை வருவதற்குள் நான் ஒளிந்து கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. கிராண்ட்மா,ஜீனோ சொன்னதுக்காக அயகா பதில் சொல்லிட்டீங்கோ..ரெம்ப சந்தோஷமா இர்க்கு.மிக்க,மிக்க,மிக்க,மிக்க நன்றி!நன்றி!நன்றி!

  /ஜீனோமாதிரி இல்லாமல், உண்மையான பதில்களை அழகாகக் கூறியிருக்கிறீங்க./கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! அதிராக்கா,வாணாம்..உறங்கற சிங்கத்த உசுப்பிவிட்டீங்கண்டா சிங்கம் சிலிர்த்து எயுந்திருவர்.அப்பறம் ஒரே காமேடி கடியாப் போயிரும்...வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  /பப்பி கடிச்ச கடி... பரவாயில்ல. ;)) / ஹிஹிஹி! டாங்கீஸ் ஆன்ரி!

  /நல்ல தெளிவான ( பூஸார் போல மழுப்பாமல் ) பதில்கள்./ஒரு வாசகம் எண்டாலும் திருவாசகம் வாணியக்கா! அக்காதானே மயுப்பறது எப்பூடி,தாவி ஓடி எஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஆவது எப்பூடின்னு தம்பிக்கு காட்டிக் கொடுத்தவர். நன்னி ஹை!

  க்ராண்மா,தொடரக் கூப்பிட்ட ஆளு ஜூப்பரு!!எங்கே அண்ணேவக் காணம்? அப்பிள் பை நீலமாகாணத்திலை டெலிவரி ஆகேல்லையோ? இலா சிஸ்டேரையும் காணம்??

  /இன்னும் எழுதுங்கள்..

  :-) / ஜெய்..லானி அண்ணே,சரியாச் சொன்னீங்கள். க்ராண்ட்மா இன்னும் உண்மைப்பெயரைக்கூடச் சொல்லல்லை.சொல்லச்சொல்லுங்கோஓஓஓ!;)

  பதிலளிநீக்கு
 8. அன்புள்ள ஆசியா,
  //இலங்கை மக்கள் மிக அன்புடன் பழகும் தன்மை படைத்தவர்கள்.//

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. ஜெய்லானி,
  நிறைய எழுத விருப்பம் தான். ஆனால் பல சமயங்களில் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. எனினும் எழுத முயற்சிப்பேன்.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 10. அதிரா,
  நான்சொல்வது முற்றிலும் உண்மையே.
  இமா படித்ததெல்லாம் திருகோணமலையிலே தான்,
  பப்பியின் கடி பரவாயில்லை. இமா சொல்வது போல்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வானதி,
  ஹைஷ் நேரம் கிடைக்கையில் வருவார் என்று நம்புகிறேன்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. ஜீனோ,
  எனக்கு இத்தனை நன்றிகளா?
  பதிலுக்கு நானும் நன்றி நன்றி நன்றி தொடர்கிறது பலமுறை.

  பதிலளிநீக்கு
 13. சந்தனா,
  ரொம்பவே புகழ்கிறீர்கள்.
  நன்றி.

  பதிலளிநீக்கு
 14. //// இன்னும் எழுதுறதோ ஜெய்?:)) எதை இனி எழுதச் சொல்றீங்க ஜெபா ஆன்ரியை..?:)))). //

  ஹா..ஹா..பாத்தீங்களா..நீங்க உண்மையான் பேரை சொல்லல அதேப்போல அவங்களும் ஏன்..ஏன்..ஏன்..( வாயில நுழையாட்டியும் பரவாயில்லை ஆமைகுட்டிக்கு இமா மாமி வச்ச பேர் மாதிரி ஹி..ஹி..)

  பதிலளிநீக்கு
 15. //:-) / ஜெய்..லானி அண்ணே,சரியாச் சொன்னீங்கள். க்ராண்ட்மா இன்னும் உண்மைப்பெயரைக்கூடச் சொல்லல்லை.சொல்லச்சொல்லுங்கோஓஓஓ!;) //

  ஒஹ்..நீங்களும் சொல்லிட்டீங்களா அப்ப சரிதான் . அப்ப பாட்டிமாகிட்டே கேட்டுட வேண்டியதுதான்..

  பதிலளிநீக்கு
 16. //ஜெய்லானி,
  நிறைய எழுத விருப்பம் தான். ஆனால் பல சமயங்களில் உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. எனினும் எழுத முயற்சிப்பேன்.//

  பரவாயில்லை முடிந்த போது முயற்சிக்கவும் . அதே நேரம் உடல் நிலைதான் முக்கியம் :-)

  பதிலளிநீக்கு
 17. அதீஸ்,
  சும்மா எல்லாம் கேட்கப் படாது எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு வருஷம் மட்டக்களப்பில படிச்சனீங்கள் என்று. உங்களுக்கு செபாவைத் தெரியுமோ! அவாவும் அங்கதான் படிச்சவா. செய்ன்ட் தெரேசாஸ், பிறகு சிசீலியாஸ் ;)) கண்டு இருக்கிறீங்களோ!

  //சூப்பர் மாட்டி:))// எந்தப் ப்ளேனில நித்திரையோ தெரியாது ஆள். ;)

  //சிங்கம் சிலிர்த்து எயுந்திருவர்.அப்பறம் ஒரே காமேடி கடியாப்...// ;))) அதைத் தானே எதிர்பார்க்கிறம். அதை விட்டுப் போட்டு பாட்டிமா வாயைக் கிண்டுறீங்கள் எல்லாரும்.

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. //இந்தத் தொடரைத் தொடருமாறு நான் அன்புடன் அழைப்பது திரு. ஹைஷ் அவர்களை. மறுக்க மாட்டார் என்று நம்புகிறேன்/// சூப்பர் மாட்டி:)), இதன் பின்னே பெரிய கதையே இருக்கு:))).//

  அன்பு செபா அம்மா இதை பார்த்தவுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது, இந்த வலைதளத்திலேயே உலக அனுபவங்களில் மிக பெரியவர் ஒருவர் என்னை மதித்து அழைப்பதை நினைத்து, உங்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தலை வணங்குகிறேன்!

  சில தவிர்க முடியாத காரணங்களால் தற்சமயம் இத்தொடரை தொடர முடியாத நிலையில் இருக்கிறேன்! இலை மறை காய்மறையாக பலர் அறிந்ததே, இத் தொடரை எழுதினால் அதன் பின் நான் வலைதளத்துக்கு வரமுடியாத நிலையாகிவிடும். அதனால் பொய்யாக பாதி விடைகளை மட்டும் எழுத விருப்பம் இல்லை, எனக்கு சுதந்திரம் கிடைத்தவுடன் அனைத்தையும் எழுதுகிறேன்.

  அன்பு தங்கை அதிராவும் என் பெயரை குறிப்பிட்டு மெயில் அனுப்பி இருந்தார் எப்படியோ குச்சிமிட்டாய், பல்லி முட்டாய், சொக்கா, குருவி ரொட்டி எல்லாம் கொடுத்து, லிஸ்ட்டில இருந்து என் பெயரை எடுக்கும்படி சொல்லி எடுக்கவைத்தேன்..... இப்போ நீங்கள் அழைத்திருக்கிறீங்க..,உங்களிடம் இந்த் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் செல்லாதே:) எனக்கு எப்போது எழுத அனுமதி கிடைத்தாலும் கண்டிப்பாக உங்களுக்கு சொல்லி விட்டு தான் எழுதுவேன். இதுதான் அதிரா சொன்ன பெரிய கதை:)

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 20. அன்புள்ள ஹைஷ்,
  உங்களின் நிலை எனக்கு விளங்குகிறது. உங்களுக்கு முடிகிறபோது
  எழுதுங்கள்.
  அன்புடன் செபா.

  பதிலளிநீக்கு
 21. மிகவும் நன்றி அம்மா.

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 22. இமா சொன்னது…
  அதீஸ்,
  சும்மா எல்லாம் கேட்கப் படாது எனக்குத் தெரியும். நீங்கள் ஒரு வருஷம் மட்டக்களப்பில படிச்சனீங்கள் என்று.// இமா, உப்பூடியெல்லாம் வதந்திகள் வரும் நம்பப்பூடாது:).

  உங்களுக்கு செபாவைத் தெரியுமோ! /// உப்பூடியெல்லாம், செபா ஆன்ரியை மரியாதை இல்லாமல் கதைக்கப்படாது, நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


  எப்படியோ குச்சிமிட்டாய், பல்லி முட்டாய், சொக்கா, குருவி ரொட்டி எல்லாம் கொடுத்து/// ஹைஷ் அண்ணன் சொல்ல மறந்திட்டேன், முடிஞ்சுபோச்சு, இன்னொருக்கால் ஃபிறீஈஈஈ டெலிவரி பிளீஸ்ஸ்ஸ்ஸ்.

  பதிலளிநீக்கு
 23. செபா ஆண்டி எப்படி இருக்கிங்க , உங்களை பற்றி அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்சி.

  அதிரா விடம் கதைக்க ஆரம்பித்து பழக்கமான பின் இலங்கை மக்கள் மீது கொள்ளை பிரியாமாகிவிட்டது.


  அருமையான படைப்பு

  பதிலளிநீக்கு
 24. அன்புள்ள ஜலீலா,
  நல்வரவு. உங்கள் கருத்துக்கு என் நன்றி. நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்கள் என்று தெரியாது. இந்தியாவை சேர்ந்தவர் என எண்ணுகிறேன். இந்தியாவை சேர்ந்தவர்களை மட்டுமல்ல எல்லா நாட்டினரையும் எனக்குப் பிடிக்கும். இலங்கையிலும் இங்கும் எனக்குப் பல இஸ்லாமிய நண்பர்கள் இருக்கிறார்கள்.

  நன்றி.
  அன்புடன் செபா

  பதிலளிநீக்கு