கடந்த ஐப்பசி மாத நடுப் பகுதியில் ஒரு நாள் துணி கழுவுவற்கு ஆயத்தமாகப் போனேன். மொத்தக் கட்டிடத்துக்கும் பொதுவாக ஒரு அறை இதற்கென உண்டு.
அன்றுவரை உடுப்புக் கழுவும் இயந்திரத்திற்கு இரண்டு டொலர் நாணயம் உபயோகித்துக் கழுவி வந்தோம். அன்று நாணயம் செலுத்தும் பகுதி உடைக்கப் பட்டிருந்தது. வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்பினேன்.
அன்று மாலை இந்திய நண்பர் வந்ததும் அவரிடம் தெரிவித்தேன். அவர் வசிக்கும் யூனிட் அவருக்குச் சொந்தமானது. எனவே 'bodycorparate' க்கு அவர் இதனைத் தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களில் அந்த அறைக்குப் பூட்டுப் போடப்பட்டது. ஒவ்வொருவருக்கும் திறப்பும் வழங்கப் பட்டது. கதவுக்கு 'door push' ஒன்றும் இணைத்திருந்தார்கள். அதனைத் திறப்பது கடினமாக இருந்ததால் பெண்கள் எல்லோரும் மிகச் சிரமப்பட்டோம். நாங்கள் தான் சிரமப்பட்டோம். மறு முறையும் கதவு உடைக்கப்பட்டுத் திருட்டுப் போய் விட்டது.
எனவே நாணயத்திற்குப் பதிலாக 'டோக்கன்' பயன்படுத்துவது என்று தீர்மானம் எடுக்கப்பட்டது.
சில தினங்களின் பின் ஒருவர் டோக்கன்களைக் கொண்டு வந்து "இதனை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள்," என்று என்னிடம் தந்து விட்டுப் போனார்.
அன்று மாலை அவற்றை இந்திய நண்பரிடம் ஒப்படைத்தேன். அவர் "ஆன்டி, இவை உங்களிடமே இருக்கட்டும். நாங்கள் வேலைக்குப் போவதால் பகலில் தேவைப் படுவோருக்குக் கஷ்டமாக இருக்கும். நான் எல்லோருக்கும் தெரியப்படுத்துகிறேன்" என்றார்.
அன்று முதல் தேவையானவர்களுக்கு டோக்கன்களைக் கொடுத்துப் பணத்தைப் பெற்று வார இறுதியில் நண்பரிடம் ஒப்படைப்பேன். அவர் கணக்கை ஒரு நோட் புத்தகத்தில் குறித்துக் கையொப்பம் இட்டுத் தருவார்.
இந்த வேலையினால் அன்றாடம் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு
இதுவும் நல்ல ஐடியா தான் .. மற்றவர்களையும் சந்தித்து பேசும் வாய்ப்பும் கிடைக்கிறதே..!
பதிலளிநீக்கு//இந்த வேலையினால் அன்றாடம் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டுள்ளது.// ஆமாம் அம்மா. இதுவும் ஒரு சமூக சேவை போல்தானே!
பதிலளிநீக்குவாழ்க வளமுடன்
Laundry token gave you a token to meet some nice people may be :)
பதிலளிநீக்குசெபா ஆன்டி, நல்ல ஐடியாவா இருக்கு!! டோக்கன் தங்கம் போல மின்னுது.
பதிலளிநீக்குசெபா ஆன்ட்டி எனக்கும் ஒரு டோக்கன் ப்ளீஸ், என் கலெக்க்ஷனுக்கு. ;)
பதிலளிநீக்குசெபா ஆன்டி! இமாக்கு கொடுத்தா ரெண்டா கொடுங்க... அடி இல்லை டோக்கன்.. நாளைக்கு காதில மாட்ட வசதியா அழகா ஒரு மாட்டல் செய்வாங்க...
பதிலளிநீக்குஇலா இதுதான் அடுத்தவர் காலணியில் இருந்து யோசிப்பதோ:)
பதிலளிநீக்குசே தவறுக்கு வருந்துகிறேன்:) For காலணி Read காதணி :))))
பதிலளிநீக்குஜெய்லானி,
பதிலளிநீக்குஐடியா என்னுடையதல்ல. ஆனாலும் எனக்கு ஏனையோரை சந்திக்கும் வாய்ப்பு இதனால் ஏற்பட்டுள்ளது.
தவறாது என் பகுதியில் பதிவு போடும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ஹைஷ் அவர்களுக்கு,
இது ஒரு பெரிய சமுக சேவையாக நான் நினைக்கவில்லை.
அயலவர்க்கு ஒரு மிகச்சிறிய உதவி செய்வது மட்டுமேயானாலும்
அவர்களைக் கண்டு பேசும் வாய்ப்புக் கிடைப்பது மகிழ்ச்சியே.
உளமார்ந்த நன்றிகள் .
அன்புடன் செபா,
இலா,
பதிலளிநீக்கு'token' விநியோகிப்பதில் எனக்குக் கிடைத்த லாபம் அடுத்தவர்களை சந்திப்பது தான்.
இமாவுக்கு இரண்டு, இலாவுக்கு மூன்றாக ஏன் நான்கே தருகிறேன்.
அடியல்ல.
நன்றிகள்.
வானதி,
டோக்கன் நன்றாகவே மின்னுகிறது. ஆனால்
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
ஏமாற மாட்டேன் .ஏமாற்றவும் மாட்டேன்.
நன்றிகள்.
அட! ஐடியா நல்லா இருக்கே இலா. ;)
பதிலளிநீக்குஹைஷ் அண்ணே, அது பெருசு... (இல்லாட பெருவிரலுக்கு எண்டு சொன்னேன்.)
நல்லா வருந்தி இருக்கிறீங்கள். ;)))