வெள்ளி, 3 செப்டம்பர், 2010

தொடர்மாடி இல. 9

அன்று இரவு உணவு முடித்து வழக்கம் போல மருந்துமாத்திரைகள். 'இன்ஹேலர்' எல்லாம் உபயோகித்து முடித்துப் படுக்கைக்குப் போய் விட்டேன்.
 
'டக், டக்' என்று கதவில் ஒலி. 
எழுந்து வந்து பார்த்தேன். எங்கள் மாடி யூனிட் இளம் பெண் மேர்ஸி கலவரமடைந்த முகத்தோடு.

 "என்ன விடயம்?" எனக் கேட்டேன்.
 "ஒன்பதாவது யூனிட் நண்பருக்கு என்ன நடந்தது?"

"ஏன்?"  

"கதவு பூட்டி இருக்கிறது. உள்ளே லைட் எரிகிறது. கதவில் வெளிப்புறமாகத் திறப்பு உள்ளது. பல தடவை தட்டினேன் எந்த விதமான விடையும் கிடைக்கவில்லை. ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்குமோ என்று பயமாக இருக்கிறது. நீங்கள் என்னுடன் வருகிறீர்களா?" என்றார்.

நான் என் கணவரை அவருடன் அனுப்பினேன். இருவரும் கதவைத் தட்டிப் பார்த்த பின் காரைப் பார்த்து விட்டுப் பின் பக்கமாகப் போய், பின் பக்க மொட்டைமாடிக் கதவும் திறந்துள்ளதைப் பார்த்துள்ளார்கள்.

மீண்டும் கதவைத் தட்டிய பின் கதவைத் திறந்தால்.. உள்ளே நண்பர் கணனியில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.
 
இவர்களிருவரையும் கண்டதும் சிரித்துக் கொண்டே வரவேற்றாராம். 
 
"நீங்கள் உயிருடன் தான் இருக்கிறீர்களா? உங்களுக்கு என்ன நடந்ததோ என்று நாங்கள் கவலைப்பட நீங்கள் உல்லாசமாக இருகிறீர்களா?" என்று சாவியைஅவரிடம் கொடுத்து விட்டு வந்தார்கள்.  
 
அடிக்கடி இப்படி ஏதாவது குளறுபடி செய்யாவிட்டால் இவருக்கு நிம்மதியாக இராதோ ?

13 கருத்துகள்:

 1. ஹா..ஹா.. அவ்வளவு சின்ஸியரா என்ன பண்ணிகிட்டு இருந்தாரோ ..ஒரு வேளை சாட்டிங்கா இருக்கலாம்

  பதிலளிநீக்கு
 2. // அடிக்கடி இப்படி ஏதாவது குளறுபடி செய்யாவிட்டால் இவருக்கு நிம்மதியாக இராதோ ?//

  ஹா..ஹா..அடுத்த வங்களை டெஸ்ட் பண்றாரோ என்னவோ.. உஷாரா இருக்கீங்களான்னு

  பதிலளிநீக்கு
 3. நான் கூட திகில் கதை அங்கு வரும் என எதிர்பார்த்தேன் ஆனால் இங்கு உண்மையாகவே திகில் சிறுகதை எழுதிட்டீங்க அம்மா:)

  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 4. செபா ஆன்டி!அது உங்க வீட்டு இலக்கம் என்று நினைத்தேன்... உண்மையில் இங்க பயமே கார்பன் மோனாக்சைட் கொல்லியினால்.. நானாக இருந்தாலும் பயப்பட்டிருப்பேன்..
  //கணனியில் மும்முரமாக வேலையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்திருக்கிறார். //

  ஒன்னும் சொல்ல‌ற‌திக்கில்லை :))

  பதிலளிநீக்கு
 5. நாம் நலம். இருக்கும் இடம் வேறு. செபாம்மா இன்னும் தூக்கத்தில் இருக்கிறார்கள். மீதி விபரம் பிறகு.

  பதிலளிநீக்கு
 6. நாம் நலமாக இருக்கிறோம். எங்களைப் பற்றி கவலையுடன் விசாரித்த
  அன்பர்களுக்கு நன்றி.
  மிக்க அன்புடன் செபா.

  பதிலளிநீக்கு
 7. ஒரு நாளைக்கு சாவியை எடுத்து ஒளிச்சு வையுங்கோ, ஆன்டி. அப்பதான் வழிக்கு வருவார்.

  பதிலளிநீக்கு
 8. ஜெய்லானி,
  அவர் எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார். எது நடந்தாலும் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். என்னால் அப்படி இருக்க நிச்சயமாக முடியாது.

  நன்றி ஜெய்லானி ஆசிரியர் தின வாழ்த்துகளுக்கும்.

  பதிலளிநீக்கு
 9. ஹைஷ்,
  பல வேலைகளின் இடையே இங்கேயும் வருவதற்கு என் நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாணி,
  சாவியை எடுத்து மறைத்து விட்டால் கூட அவரது சிரிப்பை மாற்ற
  முடியும் என்று நான் நினைக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 11. இங்கும் ஸ்மைலி தானோ.

  வரவிற்கு நன்றி.

  பதிலளிநீக்கு